சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டுவதாக எதிர்ப்பு- இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் பதற்றம்!
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்ட அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் இன்று மீண்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. சர்ச்சைக்குரிய மசூதி கட்டும் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிம்லாவின் சஞ்சவுலி தல்லி சுரங்கப் பாதை அருகேதான் சர்ச்சைக்குரிய மசூதி கட்டப்பட்டு வருகிறது. இந்த மசூதி சட்டவிரோதமாக கட்டப்படுகிறது; இதனை ஆளும் காங்கிரஸ் அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்பது இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஆளும் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இன்று சஞ்சவுலி மசூதிக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிம்லா எஸ்பி சஞ்சீவ் குமார் கூறுகையில், சஞ்சவுலி பகுதியில் நேற்று இரவு அமைதியை நிலைநாட்ட கொடி அணிவகுப்பு நடத்தினோம். தற்போதும் பெரும் எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் தீவிரமாக கண்காணிப்போம். வன்முறையில் ஈடுபடக் கூடிய சிலரை அடையாளம் கண்டு எச்சரித்துள்ளோம். சட்டத்தை கையில் எடுத்து யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மேலும் சமூக வலைதளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப சாத்தியம் இருக்கிறது. சிம்லா அமைதியான நகரம். சிம்லாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த தொல்லையும் தந்துவிடக் குடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆகையால் அனைத்து தரப்பும் அமைதியை உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சஞ்சீவ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி இருந்து வரும் நிலையில் மசூதி விவகாரம் பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இந்து அமைப்புகள் இதே பிரச்சனைக்காக போராட்டம் நடத்திய நிலையில் இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications