இந்தியை ஐ.நா. வின் அலுவல் மொழியாக்க முயற்சியா? சுஷ்மா சுவராஜ் விளக்கம்
உலகளவில் இந்தியை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தி மொழியை ஐக்கிய நாடுகளின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியை ஐ.நா. அலுவல் மொழியாக்குவது குறித்து உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், இந்தியை சர்வதேச மொழியாக பிரபலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தலைவர்கள் பலமுறை ஐநாவில் இந்தியில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 2008-ல் மொரீஷியஸில் உலக இந்தி தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது.

உலகளவில் இந்தியை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் விளைவாக ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை கொண்டு வரவும் முயற்கள் நடந்து வருகிறது. இதன் விளைவாக, ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ இணையதள ரேடியோவில் இந்தியில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன இவ்வாறு சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications