நோயாளிகளுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்... உ.பி-யில் நடந்த விபரீதம்
உத்தரபிரதேசத்தில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதால் 21பேருக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Recommended Video

உன்னோ: குறைந்த செலவு மருத்துவம் என்று நம்பி வந்த நோயாளிகளுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி அனைவருக்கும் எய்ட்ஸ் நோயை மருத்துவர் ஒருவர் பரப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட மருத்துவக்குழுவினர் உன்னோ பகுதியில் அதிகமாக எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து நவீன கருவிகளுடன் அப்பகுதியில் முகாமிட்ட மருத்துவக்குழுவினர் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 21பேருக்கு எய்டஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ந்துப்போன மருத்துவக்குழு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலத்தில் ஒரே மருத்துவரிடம் ஊசிப் போட்டுக்கொண்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ராஜேந்திர குமார் என்ற அந்த மருத்துவரிடம் சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் அனைவருக்கும் ஒரே ஊசியை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவரை கைது செய்த போலீசார், அவரிடம் மேலும் எத்தனை பேருக்கு ஒரே ஊசியை அவர் பயன்படுத்தினார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது
குறைந்த செலவில் மருத்துவம் என்று நம்பி வந்த ஏழை மக்கள் தற்போது உயிருக்கே ஆபத்தான நோயுடன் வாழ்க்கையை தொலைத்தபடி இடிந்துப்போயுள்ளனர். இவ்விவகாரத்தில் தற்போது தீவிரம் காட்டி வரும் சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications