ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் வன்முறை - 11 பேர் பலி; 200 பேர் காயம்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நடந்த வன்முறை மோதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஜ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால், அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, செல்போன் இணைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் உட்பட 200 பேர் காயமடைந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications