ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ரெடியாகும் பாஜக.. அமித்ஷா நேரடி விசிட்! பிளான் இதுதான்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட்டுக்கு விசிட் சென்றுள்ளார். பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்று இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விசிட் சென்றுள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 தினங்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் சென்று இருந்தார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்க்கேற்று பேசினார்.

jharkhand assembly election 2024 bjp amit shah

தனது ஜார்கக்ண்ட் பயணத்தின் போது வந்தே பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் சென்று வந்து 4 நாட்களே ஆகியிருக்கும் நிலையில், அமித்ஷாவும் அங்கு சென்றுள்ளது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று ராஞ்சியில் தங்கும் அமித்ஷா, கட்சியின் மாநில தலைவர்களையும் மூத்த நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

நாளை காலை, ஷாகிபஞ்ச் மாவட்டத்திற்கு அமித்ஷா செல்கிறார். அங்கு 1855-56 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து கலகம் செய்து உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செய்கிறார். அதன்பிறகு கட்சியின் 'பரிவர்தன் யாத்ரா'வை தொடங்கி வைத்தார். ஷாகிபக்ஞ்ச் என்ற இடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.

அமித்ஷா பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். ஜார்க்கண்டில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் இந்த பரிவர்த்தன் யாத்ராவில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்தீஷ்கர் முதல்வர் விஷு தியோ சாய், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஒடிசா முதல்வர் மோகன் சரன் மஜ்ஹி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2025 ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+