Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்து.. ஆத்திரக்கார பெற்றோர்.. அதிர வைக்கும் ஆணவ கொலை

17 வயது மகளை பெற்றோர் கொன்று எரித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chittoor honour killing : மகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்த.. ஆத்திரக்கார பெற்றோர்.. !

    சித்தூர்: காதலில் விழுந்த சந்தனா.. இதுதான் பெற்றோருக்கு ஆத்திரம்.. மகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்து.. மீண்டும் ஒரு ஆணவ கொலை அரங்கேறி உள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது!

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே உள்ளது குப்பம் ரெட்லபள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெண் சந்தனா. 17 வயது பெண்! குப்பத்தில் உள்ள அரசு காலேஜில் படித்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது நந்தகுமாரும் அதே காலேஜ்தான். இவர்கள் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் 2 பேருமே வேறு வேறு சமூகம். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்தது.. சிறுமியை வீட்டில் கண்டித்தனர். ஆனாலும் காதல் வேகம், நந்தகுமாரை விட மனசில்லை. அதனால் காலேஜுக்கு 2 மாசமாக பெற்றோர் சந்தனாவை அனுப்பவே இல்லை.

    திருமணம்

    திருமணம்

    அதனால், காதலர்கள் இருவருமே வீட்டை விட்டு வெளியே ஒரு கோயிலில் கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் சிறுமியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை சிறுமி தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றுவிட்டனர். இரு வீட்டு பெற்றோரும் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டனர். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது.

    இறுதி சடங்கு

    இறுதி சடங்கு

    ஊர் பெரியவர்களோ.. முதலில் பெண்ணுக்கு திருமண வயது.. அதுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி, காதலர்கள் இருவரையும் அவரவரர் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்கு வந்த சந்தனா, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் சொன்னார்கள். அவசர அவரசரமாக தங்களது விவசாய நிலத்திற்கு சந்தனா உடலை கொண்டு போனார்கள்.. அங்கேயே உடலை எரித்து, இறுதிச்சடங்கும் செய்தனர்.

    எலும்புத் துண்டுகள்

    எலும்புத் துண்டுகள்

    தீயில் மொத்தமாக சந்தனாவின் உடல் எரிந்து முடிந்தது. கடைசியில் அவளது சாம்பலை அள்ளினார்கள். கொஞ்சம் நஞ்சம் கிடந்த எலும்பு துண்டுகளையும் தேடி எடுத்து ஒரு பைக்குள் போட்டுக் கொண்டு, அங்குள்ள ஒரு ஆற்றிலும் கரைத்து விட்டனர். இப்படிஒரு சம்பவம் நடந்தது எதுவுமே பக்கத்து வீட்டுக்காரர்களுக்குகூட தெரியாது.

    விசாரணை தீவிரம்

    விசாரணை தீவிரம்

    விடிந்ததும் சந்தனா இறந்ததை கேட்டு ஊரே அதிர்ந்தது. மகளை பெற்றவர்களே கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுத்தது.. போலீசாரும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடம், எரித்த இடம், கரைத்த இடம்.. ஒன்றுவிடாமல் இடங்களை பார்வையிட்டனர்.

    ஆணவ கொலையா?

    ஆணவ கொலையா?

    வழக்கு பதிவு செய்து இது ஆணவ கொலையா என்ற கோணத்தில் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். பெத்த மகளையே கொன்றவர்கள் தன்னையும் கட்டாயம் கொலை செய்வார்கள் என்று பயந்து இப்போது நந்தகுமாரும் அவரது தந்தையும் தலைமறைவாக உள்ளனர். அதனால் அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சித்தூரையே நடுங்க வைத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+