"ஆதிவாசி".. ஆடைகளை களைந்து.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த அக்கப்போர்.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய 4 பேர் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: பெண் ஒருவரை சரமாரியாக தாக்கி, நடுரோட்டில் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளது ஒரு கும்பல்.. இதையடுத்து 4 பேர் கைதாகி உள்ளனர்.
பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..!

ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது..!

வன்முறைகள்

வன்முறைகள்

அதற்கு பதிலாக, மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. அந்தந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுத்தாலும், அதற்கு ஆளும் தரப்புகள் சரியான தீர்வை அணுகாமலேயே உள்ளன..

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இதைதவிர, பஞ்சாயத்து என்ற பெயரில் ஊருக்கு நடுவே பெண்களை நிற்க வைத்து, அவர்களின் மானத்தை வாங்குவதும், இழிவாக நடத்தப்படுவதும் தொடர்கிறது.. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களே என்பது, அதைவிட வருத்தமான செய்தி.. அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலத்திலும் ஒரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஜஹாபுவா பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு, அவருடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. அதனால், கணவனை விட்டு பிரிந்துவிட்டார்.. கடந்த 8 மாதத்திற்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

புருஷன்

புருஷன்

ஆனா, முகேஷூடனும் அந்த பெண்ணுக்கு பிரச்சனைகள் வெடித்ததால், அவரை விட்டு பிரிந்து, மறுபடியும் தன்னுடைய கணவர் வீட்டிற்கே வந்து அவருடன் வாழத்தொடங்கியுள்ளார்.. இது முகேஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. பெண் அதனால், அந்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்தார்.. இதற்காக தன்னுடைய நண்பர்கள் 5 பேரை சேர்த்துக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தார்.. வீட்டில் கணவர் உட்பட உறவினர்கள் எல்லாருமே இருந்தனர்.. ஆனால், இந்த கும்பல் உள்ளே நுழைந்து, அனைவரது கண்முன்னாடியும் அந்த பெண்ணை தரதரவென வெளியே இழுத்து வந்தது.

 அக்கிரமம்

அக்கிரமம்

நடுரோட்டில் வைத்து, கொடூரமாக தாக்கியது.. ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியது.. இதை பார்த்து கதறிய பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களும் அவர்களை தடுக்க முயற்சித்தனர்.. ஆனால், அந்த கும்பல் இவர்கள் எல்லாரையுமே தாக்கியது.. இதை பார்த்து ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ந்தனர்.. ஆனால் யாருமே இவர்களுக்கு பயந்து கொண்டு பக்கத்தில் வரவில்லை.. சம்பவத்தையும் தடுக்கவில்லை.. ஆனால் நடந்த சம்பவத்தை வீடியோக்கள் எடுத்து கொண்டனர்..

பழங்குடியினர்

பழங்குடியினர்

தாக்குதல் நடத்திய முகேஷும், அந்த பெண்ணும் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.. இந்த வீடியோ பெரும் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த வீடியோவை பார்த்து முன்னாள் முதல்வர் கமல்நாத் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இதையடுத்து அந்த பகுதியின் எஸ்.பி அரவிந்த் திவாரி என்பவர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இப்போதைக்கு 4 பேர் மட்டும் கைதாகி உள்ளனர்.. மீதமுள்ள 2 பேரை காணவில்லை.. தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+