பானிப்பட்டில் அரங்கேறிய கொடூரம்... 11 வயது சிறுமியின் பிரதேத்துடன் உடல்உறவு!

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தாங்கள் பிணத்துடன் உடல் உறவு கொண்டதை ஒப்பு கொண்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பானிபட்: ஹரியானா மாநிலம் பானிபட்டில் 11 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் தாங்கள் இறந்த சிறுமியின் உடலுடன் உடலுறவில் ஈடுபட்டதை ஒப்புகொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு பானிபட்டின் உர்லானா கலன் கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை காணவில்லை என்று பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உர்லானா கலன் கிராமத்திற்கு வெளியே குளம் ஒன்றின் அருகே அரை நிர்வாணத்துடன் காணாமல் போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இரண்டு குற்றவாளிகள் கைது

இரண்டு குற்றவாளிகள் கைது

இந்நிலையில் சிறுமி கடத்தல் தொடர்பாக 28 வயது பிரதீப் குமார் மற்றும் 22 வயது சாகர் இருவரை போலீசார் கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

சிறுமி கடத்தி கொலை

சிறுமி கடத்தி கொலை

அப்போது குற்றவாளிகள், சிறுமியை தாங்கள் கடத்தியது உண்மை தான் என ஒப்பு கொண்டுள்ளனர். சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சிறுமியை கடத்தியதாகவும், அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சிறுமி அவர்களை தாக்கியதாகவும் கூறியுள்ளனர். இதனால் தாங்கள் கையில் வைத்திருந்த ஸ்கார்ப்பால் சிறுமியை கொன்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இறந்த சிறுமியுடன் உடலுறவு

இறந்த சிறுமியுடன் உடலுறவு

மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலோடு உறவு வைத்துக் கொண்டதோடு உடலை மறைத்துவிட்டு தப்பிவிட்டதையும் குற்றவாளிகள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலாக மாறும் குற்றங்கள்

அச்சுறுத்தலாக மாறும் குற்றங்கள்

நாடு முழுவதும் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், இதற்காக அரங்கேறும் கொலை சம்பவங்களும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்றினால் மட்டுமே சமூகத்தில் பெண் பிள்ளைகளை பாதுகாக்க முடியும் என்ற நிலையை அடுத்தடுத்து அரங்கேறும் குற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+