இடதுசாரி சிந்தனையாளர்கள் கைது.. சிறப்பு விசாரணை குழு அமைக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video

டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்கள் நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலையீட்டால், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, செயற்பாட்டாளர்களுக்கு மேலும் 4 வாரங்கள் வீட்டுக்காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதேநேரம் 3 நீதிபதிகள் அமர்வில் இருந்த, நீதிபதி சந்திரசூட் மட்டும் தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி! ]
காவல்துறை இந்த வழக்கில் வேண்டுமென்றே ஆவணங்களை ரிலீஸ் செய்து மீடியா டிரையல் நடத்த உதவி செய்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் தலைமை நீதிபதியோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களுக்கு எந்த மாதிரி விசாரணை வேண்டும் என்று கேட்பது சரியில்லை. எதிர் கருத்து கொண்டவர்கள் என்பதற்காக மட்டுமே இவர்கள் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது என்று கூறினார்.
இதனிடையே 5 பேர் விவகாரத்தில்
சிறப்பு விசாரணை குழு அமைக்க மறுத்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications