பலத்த பாதுகாப்பு இருந்தும் கசிந்த ஆதார் தகவல்கள்... இதை மத்திய அரசு எப்படி சரி செய்ய போகிறது?
டெல்லி: பலத்த பாதுகாப்புகள் இருந்தும் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இதை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதார் அட்டைகள் கட்டாயமா, இல்லையா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஆதார் கட்டாயம் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது தனிநபரின் தகவல்களை பாதுகாப்பது உள்ளிட்ட சிறு சிறு மாற்றங்களை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?]
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆதார் தகவல்கள் கசிவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அப்போது ஆதார் தகவல்கள் ஹரியாணா மாநிலத்தில் 13 அடி உயர சுற்றுச்சுவர் கொண்ட கட்டடத்தில் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

பகிரங்கம்
ஆதார் தகவல்களை திருட முடியாது என்று கூறிய டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். அப்போது முடிந்தால் என்னுடைய தகவல்களை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.

ஆப்பிள் ஐபோன்
இவர் சவால் விடுத்த அடுத்த நாளே சர்மாவின் பான் எண், மாற்று போன் எண், ஈமெயில் ஐடி, அவர் பயன்படுத்தும் போனின் வாட்ஸ் ஆப் படம் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டனர். இன்னொரு ஹேக்கர் சர்மா பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோனின் எண்ணை வெளியிட்டார்.

ஹரியாணாவில்
சர்மா தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்ற தகவலையும் ஹேக்கர்கள் தெரிவித்தனர். இது போல் ரூ. 500 கொடுத்தால் 10 நிமிடத்தில் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண் கொண்டவருடையதுதான் என்பதை ஹரியாணாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு நிறுவனமும் தெரிவித்தது.

மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இது போன்று ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதார் தகவல்களை பாதுகாப்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே ஆதார் தகவல்கள் திருடப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications