For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் தகவல்கள் 13 அடி சுற்றுச் சுவர் கொண்ட ஒரு பெரிய கட்டடத்தில் ஆதார் பாதுகாக்கப்படுகிறது.

ஆதார் எண் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் அதை தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

[ஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்! ]

இந்த மனு தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 4 மாதங்களாக விசாரித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் நடந்த விசாரணையின்போது பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

நேரடி ஆய்வு

நேரடி ஆய்வு

அப்போது மத்திய தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் கூறுகையில் ஆதார் அட்டையின் தகவல்கள் 13 அடி சுற்றுச் சுவர் கொண்ட ஒரு கட்டடத்தில் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதை உறுதி செய்ய ஆங்கில ஊடகம் ஒன்று அந்த இடத்துக்கு நேரடியாக புறப்பட்டது.

வீரர்கள் அனுமதிக்கவில்லை

வீரர்கள் அனுமதிக்கவில்லை

ஆதார் தகவல்கள் ஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஒரு கட்டடத்தில் பாதுகாக்கப்படுகிறது. எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள செய்தியாளர்கள் அங்கு சென்ற போது அவர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் அனுமதிக்கவில்லை.

24 மணி நேர பாதுகாப்பு

24 மணி நேர பாதுகாப்பு

அப்போது அந்த ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் அங்கிருந்த பாதுகாப்பு பணியினரிடம் பேசினார். அவர் கூறுகையில் இந்த கட்டடத்தில் 159 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆதார் தகவல்கள் உள்ள அறைக்கு 24 மணி நேர பாதுகாப்பு உள்ளது.

13 அடி உயரம்

13 அடி உயரம்

4 ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர். இது மட்டுமல்லாமல் 2 தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த அறையை சுற்றி 13 அடி உயரம் கொண்ட மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவர்களின் தடிமனே 5 அடி இருக்கும்.

200 கேமராக்கள்

200 கேமராக்கள்

அவர்கள் உள்ளே நுழைவதற்கு கேட் பாஸ் வழங்கப்படுகிறது. இங்கு 200 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

English summary
Do You know how Aadhar details are protected? It was protected in the building which has 13 feet height.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X