இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தில்லுமுள்ளு செய்து வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் விமர்சித்துள்ளார். ஹெட்மயர் விக்கெட் சர்ச்சையானது என்று கூறியுள்ள முகமது ஆமீர், அவர் இருந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக 230 ரன்களை கடந்து சென்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி சஞ்சு சாம்சனின் சிறந்த ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி இருக்கிறது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்று கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் முகமது ஆமீரின் கணிப்பு தவறு என்று இந்திய அணி நிரூபித்திருக்கிறது.
இதுதொடர்பாக முகமது ஆமீர் பேசுகையில், என்னை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மயர் விக்கெட் கொஞ்சம் சர்ச்சைக்குரியது. அந்த நேரத்தில் ஹெட்மயர் விக்கெட் இல்லை என்று கருதினேன். ஒருவேளை ஹெட்மயர் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் களத்தில் செலவிட்டிருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணியால் எளிதாக 220 முதல் 230 ரன்களை குவித்திருக்க முடியும்.
ஆனால் எனது கணிப்பு தவறிவிட்டதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இருந்தாலும் சஞ்சு சாம்சனின் அவரின் வாழ்நாளுக்கான இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார். அவரின் ஐபிஎல் மற்றும் இதர போட்டிகளில் ஆடிய இன்னிங்ஸை பார்த்துள்ளேன். எதுவும் இந்த அளவிக்கு நெருக்கமாக வராது. அதுவும் வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடி இருப்பது நிச்சயமாக ஸ்பெஷல் தான்.
அதேபோல் கிரிக்கெட் அனலிஸ்ட் பார்வையில் பார்த்தால், இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. ஃபீல்டிங்கில் அவ்வளவு சொதப்புகிறார்கள். பும்ராவை தவிர்த்து மற்ற அத்தனை பவுலர்களும் ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள். இந்திய அணி ஒரேயொரு வீரரின் வலிமையை வைத்துக் கொண்டு விளையாடி வருகிறது என்று கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications