Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கம்பீரை காப்பாற்றிய சஞ்சு.. "அந்த" 9 ஓவர் சேட்டன் ஆட்டத்தை கவனிச்சீகளா.. இங்க விஷயமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக் கோப்பை டி20 தொடரில் நேற்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதில் மிகப் பொறுப்புடன் விளையாடிய சஞ்சு சாம்சனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நிலைமையை உணர்ந்து விளையாடிய அவர், கம்பீரின் இடத்தையும் கூட சேர்த்தே காப்பாற்றி இருப்பதாகச் சொல்கிறார்கள் நெட்டிசன்கள்! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பையில் நேற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா போட்டி தான். வெல்லும் அணி அரையிறுதிக்குச் செல்லும் என்ற சூழலில், இந்தியா இந்த போட்டியை வென்றது.

Sanju Samson

சஞ்சு சாம்சன்

இதில் சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும். இப்போது இந்திய அணியில் டாப் ஆர்டரில் இருக்கும் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்டோர் ஒரே கியரில் அடிக்கக்கூடியவர்கள். அதாவது களமிறங்கினாலேயே எல்லா பந்துகளையும் பறக்க விட வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். இப்படி வந்து தடாலடியாக ஆட முயல்வதால் ஒன்று ரன்களை வெகு விரைவாகக் குவிக்க முடியும். அல்லது அவுட் ஆகும் ஆபத்தும் இருக்கிறது.

பொறுப்பான ஆட்டம்

நேற்றைப் போட்டியில் 2வது ஆப்ஷனே நடந்தது. அபிஷேக் (10 ரன்கள்), இஷான் கிஷன் (10 ரன்கள்), திலக் வர்மா (27 ரன்கள) என வரிசையாக அவுட் ஆனார்கள். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தாலும் கூட மறுபுறம் சஞ்சு சாம்சன் மிக பொறுப்புடன் விளையாடினார். ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் விக்கெட்கள் விழ ஆரம்பித்தவுடன் தனது ஸ்டைலை மாற்றி அணிக்கு நிலைத்தன்மை கொடுத்தார். 9 ஓவரில் 50 ரன்களை அடித்த போதிலும் சஞ்சு நிலைமை உணர்ந்தே ஆடினார்.

குறிப்பாக 11ஆவது ஓவர் முதல் 19வது ஓவர் வரை அவர் பந்தை தூக்கி அடிக்கவே இல்லை. அதற்காக இந்த ஓவர்களில் அவர் ரன்களை அடிக்காமல் இருந்துவிடவில்லை. ரிஸ்க் இல்லாமல் ரன் எடுக்க அவர், பவுன்டரிகளில் குறிவைத்தார். இதன் மூலம் அவுட் ஆகும் ரிஸ்க்கும் குறைந்தது. அதேநேரம் மற்றொரு பக்கம் ரன்களும் வந்து கொண்ட இருந்தது. போட்டியின் சூழலை உணர்ந்து அவர் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்டதே இதற்குக் காரணம்.

அனுபவம்

அவரும் தூக்கி அடிக்கிறேன் எனச் சொல்லி அடித்திருந்தால் அவ்வளவு தான் போட்டியே மாறி இருக்கும். இந்தியா நிச்சயம் வென்று இருக்கும் எனச் சொல்ல முடியாது. தனது பொறுப்பையும் ஆட்டத்தையும் உணர்ந்து பவுன்டரிகளை குறிவைத்த சஞ்சுவின் இந்த ஆட்டம் அவரது அனுபவத்தையே காட்டுகிறது.

மேலும், இந்த ஆட்டத்தின் மூலம் சஞ்சு அணியில் தனது இடத்தை மட்டும் தக்கவைத்துக் கொள்ளவில்லை. பயிற்சியாளர் கம்பீரையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறார் எனச் சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த சில காலமாகவே பயிற்சியாளராகக் கம்பீர் எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து விமர்சனங்களைக் கிளப்பி வருகிறது. நல்ல பார்மில் இருக்கும் வீரரை திடீரென வெளியே உட்கார வைப்பது.. ஒரு சில வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு தருவது எனக் கம்பீர் எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து சர்ச்சையாகிறது.

கம்பீரை காப்பாற்றிய சஞ்சு

சஞ்சு சாம்சனுக்கு கூட அப்படி தான் நடந்தது. டாப் ஆர்டரில் கலக்கிக் கொண்டு இருந்தபோது, திடீரென அவரை கீழே இறக்கிவிட்டார். இதனால் பார்ம் அவுட் ஆன அவர், அணியில் இருந்தும் தூக்கப்பட்டார். இப்படி நன்றாக இருக்கும் குட்டையைக் குழப்புவதே கம்பீரின் வேலையாக இருக்கிறது. இந்த தொடரிலும் கூட துணை கேப்டனாக உள்ள அக்சர் படேலை கூட வெளியே உட்கார வைத்தது அப்படி தான் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனால் இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் இந்தியா சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி இருந்தால் அது மிகக் கடுமையான விமர்சனத்தைக் கிளப்பி இருக்கும். பயிற்சியாளர் என்ற முறையில் கம்பீரின் வேலைக்கே கூட இது வேட்டு வைத்து இருக்கும். ஆனால், அதையும் நடக்காமல் காப்பாற்றியதே சஞ்சுவின் பொறுப்பான ஆட்டம் தான்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+