சகட்டுமேனிக்கு தாக்கும் ஈரான்.. இஸ்ரேலுக்காக வளைகுடா நாடுகளை அமெரிக்கா கைவிட்டு விட்டது.. சவுதி அதிகாரி பகீர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமெரிக்கா தனது வளைகுடா நட்பு நாடுகளைக் கைவிட்டுவிட்டதாக சவுதி அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு வளங்களை திசை திருப்பியதால், பல அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு இலக்காகும் அபாயத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு ஈரானும் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது.

Saudi Official Alleges US Abandoned Gulf Allies Amid Iran Israel Escalation

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், "கமேனியை படு கொலை செய்தது முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான போர்.

இதற்கு அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உரிய பதிலடி தராமல் ஓய மாட்டோம். இந்த குற்றத்தை செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி தருவோம். இது, முஸ்லிம் நாடுகள் வரலாற்றில் புதிய அத்யாயத்தை உருவாக்கும்" என்று எச்சரித்தார்.

பதற்றமான சூழல்

இதையடுத்து இஸ்ரேலை மட்டுமல்லாது, அமெரிக்கப் படைகளைக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா போன்ற வளைகுடா அரபு நாடுகளையும் நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அது ஏவியது. இதனால் மேற்காசியா முழுதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் மீது ஏவுகணை வீசி ஈரான் தாக்கியது. அங்குள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை வீசியது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக துபா யில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மட்டும் 165க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளது. விமான நிலையங்கள், ஹோட்டல்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளன.

இதனால் வளைகுடா நாடுகள் என்றாலே பாதுகாப்பான புகலிடங்கள் என்ற நீண்டகாலக் கருத்து தற்போது ஈரான் தாக்குதலால் தகர்ந்துவிட்டது. இந்த நிலையில் தான், அமெரிக்கா தனது வளைகுடா நட்பு நாடுகளைக் கைவிட்டுவிட்டதாக சவுதி அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா கைவிட்டு விட்டதாக

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு வளங்களை திசை திருப்பியதால், பல அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு இலக்காகும் அபாயத்தில் உள்ளதாக கூறினார்.

உலக முழுவதும் அமெரிக்கத் தளங்களையும், பொதுமக்கள் மையங்களையும் குறிவைத்து ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. ஈரானின் இச்செயல்களை இறையாண்மை மீறல்கள் என வளைகுடா நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

பாதிக்கப்பட்ட 'சகோதர நாடுகளுக்கு' சவுதி அரேபியா முழு ஒருமைப்பாட்டை தெரிவித்ததோடு, கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகளும் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டன. தேவைப்பட்டால் பதிலடியும் கொடுக்க தயாராக இருப்பதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+