Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛பம்பாய்’ படத்தை மிஞ்சிய காதல் கதை! விவாகரத்து பெற்ற சச்சின் பைலட்! மனைவி சாரா யாருடைய மகள் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவின் மூலம் சச்சின் பைலட் தனது மனைவியும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பாரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்தது உறுதியான நிலையில் இருவருக்கும் இடையேயான மதத்தை கடந்த காதல் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இங்கு துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்தார். அதன்பிறகு அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதலால் அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

How both meet and fell in love Sachin Pilot and Sara Abdullah? now Divorced

தற்போது சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நீடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீட்க பாஜகவும் போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை பெறும் முனைப்பில் அம்மாநில தலைவர் சச்சின் பைலட் உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் தனது மனைவி சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்தது உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பான விபரத்தை அவர் ரகசியம் காத்து வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் தேர்தலில் சச்சின் பைலட் தற்போதைய தேர்தலில் டோங்க் சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ளார். சச்சின் பைலட் தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அவர் அங்கு களமிறங்கி உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மனைவி சாரா அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்றிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சாரா அப்துல்லா என்பவர் தேசிய மாநாட்டு கட்சியின் தற்போதைய தலைவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீரின் முதல்வருமான பாரூக் அப்துல்லாவின் மகள் ஆவார். இந்த தம்பதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்த நிலையில் ஆரன், வெஹான் என 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சச்சின் பைலட்டுடன் உள்ளனர். இந்நிலையில் தான் சச்சின் பைலட்டும், அவரது மனைவி சாரா அப்துல்லாவும் மதங்களை கடந்து காதல் திருமணம் செய்ததும், அதற்காக அவர்கள் 2 பேரும் தங்களின் வீட்டை எதிர்த்து போராடிய தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் தமிழில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி (இந்து), மணிஷா கொய்ராலா (முஸ்லிம்) நடிப்பில் வெளியான ‛பம்பாய்' திரைப்படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் 2 பேரின் காதல் கதை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சச்சின் பைலட் தந்தை ராஜேஷ் பைலட் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இந்நிலையில் தான் சச்சின் பைலட் தனது எம்பிஏ படிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். அது 1990 காலக்கட்டம். இந்த வேளையில் ஜம்மு காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக பாரூக் அப்துல்லா தனது மனைவி மற்றும் மகள் சாரா அப்துல்லாவை லண்டன் அனுப்பி வைத்தார்.

சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். இதனால் லண்டனில் வைத்து சச்சின் பைலட் மற்றும் சாரா அப்துல்லா ஆகியோர் நண்பர்களாகினர். படிப்பை முடித்த பிறகு சச்சின் பைலட் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். ஆனால் சாரா அப்துல்லா தனது தாயுடன் லண்டனில் வசித்து வந்தார். இந்த பிரிவு என்பது அவர்களுக்குள் காதலை வளர்த்துள்ளது. இதையடுத்து இருவரும் காதலை வெளிப்படுத்தி காதலிக்க தொடங்கினர்.

இதுபற்றி அறிந்தவுடன் சச்சின் பைலட் மற்றும் சாரா அப்துல்லா ஆகியோரின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சச்சின் பைலட் குஞ்சார் பிரிவை சேர்ந்தவர். ஆனால் சாரா அப்துல்லா முஸ்லிம் மதம் என்பதால் இருவரின் குடும்பமும் அவர்களின் திருமணத்துக்கு ஓகே சொல்லவில்லை. சில ஆண்டுகளாக இரு குடும்பத்தினரும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். குறிப்பாக பாரூக் அப்துல்லா காதலை கடுமையாக எதிர்த்தார்.

ஆனாலும் இந்த ஜோடி காதலை கைவிடவில்லை. எப்படியாவது இருவரும் கரம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதோடு குடும்பத்தினரை சமாளித்து அவர்கள் ஒப்புதலோடு திருமணம் செய்ய திட்டமிட்டனர். ஆனால் கடைசி வரை அது நடக்கவே இல்லை. இதையடுத்து சாரா அப்துல்லா தனது தந்தை மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து சச்சின் பைலட்டை திருமணம் செய்தார். இவர்கள் 2004ல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சிறிய அளவிலான விழாவாக நடந்து முடிந்தது. இதில் பாரூக் அப்துல்லாவின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. ஆனால் சச்சின் பைலட் தனது தந்தை ராஜேஷ் பைலட்டை சமாதானம் செய்து இணைந்து கொண்டார். இந்நிலையில் தான் 20 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதையடுத்து சச்சின் பைலட் தனது மனைவி சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+