Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுரங்கம் இடிந்தது ஏன்? தொழிலாளர்கள் எப்படி சிக்கினார்கள்? இத்தனை நாளாக உணவு தரப்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாளுக்கு பிறகு இன்று வெற்றிகரமாக மீட்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் 41 பேரும் தீபாவளி தினத்தில் சுரங்கத்துக்குள் சிக்கியது எப்படி? சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? 17 வது நாளாகியும் அவர்கள் பத்திரமாக சுரங்கத்துக்குள் இருந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை ஏற்படுத்தும் வகையில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது.

How did 41 labourers got trapped in Uttarkhand Tunnel on the day of Diwali? and How did tunnel collapse? details here

இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் விரைந்து தொடங்கியது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 17 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இன்று மீட்பு: தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், வெளிநாட்டு எக்ஸ்பர்ட்டுகள், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் வகையில் இன்னும் 2 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே துளை போட வேண்டியுள்ளது. இதையடுத்து அந்த துளையின் வழியாக குழாய் மூலம் தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர். இந்த மீட்பு பணி என்பது இன்னும் சில மணிநேரங்களில் வெற்றிகரமாக முடிவுக்கு வர உள்ளது. அதோடு 41 தொழிலாளர்களும் தங்களின் குடும்பத்தினரோடு சேர உள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியது எப்படி: இந்நிலையில் தான் இந்த 41 தொழிலாளர்களும் எப்படி சுரங்கத்துக்குள் சிக்கினர்? சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் கடந்த 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த சமயத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாமல் தொழிலாளர்கள் சுரங்க பணியை மேற்கொண்டு வந்தனர். அன்றைய தினம் அதிகாலையில் அவர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாலை சுமார் 5.30 மணியளவில் சில்க்யாரா சுரங்கப்பாதையின் 205வது மீட்டரில் இருந்து 260வது மீட்டர் இடையிலான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 260 வது மீட்டர் தொலைவுக்கு பிறகு வேலை செய்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியேறும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் குவியல் இருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

நிலச்சரிவுக்கு காரணம் என்ன: மேலும் இந்த சுரங்கப்பாதையில் சரிவு ஏன் ஏற்பட்டப்பது என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை. இருப்பினும் நிலச்சரிவுக்கு பின்னணியாக சில காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது இந்த சுரங்கப்பாதை அமையும் இடம் என்பது நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியது என கூறப்படுகிறது. இது நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றிய புவியியல் ஆராய்ச்சியாளர் சிபி ராஜேந்திரன் கூறுகையில், ‛‛இமயமலைப் பகுதி நொறுங்கும் தன்மை கொண்ட பாறைகளை கொண்டுள்ளது. மேலும் நிலையற்ற தன்மையுடன் உள்ளது. இது நிலச்சரிவுக்கு காரணமாக இருக்கலாம். மேலும் நிலச்சரிவு என்பது இந்த பகுதிக்கு ஒன்றும் புதிது இல்லை. இதுபோன்ற நிலப்பரப்பில் சாலை அல்லது சுரங்கப்பாதை அமைக்கும் போது தொடர்ந்து பேரிடர்களை சந்தித்து வருகிறோம்’’ என்றார்.

உயிர் பிழைத்தது எப்படி: சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டவுடன் மீட்பு படையின் முதல் வேலையாக மண் சரிவை அகற்றி குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். பருப்பு அரிசி, கொண்டைக்கடலை, பருப்புகள், உலர்ந்த பழங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டது. அதோடு சத்து குறைபாட்டை போக்கும் வகையில் மென்று சாப்பிடக்கூடிய வைட்டமின் சி மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் அவர்கள் நலமாக பத்திரமாக 17 வது நாளாக சுரங்கத்தில் உள்ளனர். மேலும் தொடர்ந்து மருத்துவர்களுடன் வாக்கி-டாக்கி மூலம் தொழிலாளர்கள் தொடர்பில் இருந்தனர். மேலும் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிய இடத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி என்பது இருந்தது. அதோடு தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு மற்றும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் இன்னும் சில மணிநேரங்களில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+