அஸ்வினை மைண்டில் வைத்து.. ஜடேஜாவிடம் கோட்டை விட்ட ஆஸி.. "ப்பா" பாரத்.. மிரட்டிய இந்தியா? எப்படி?
இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பின் ஸ்பின் பவுலர்கள் மட்டுமின்றி பாஸ்ட் பவுலர்கள் பங்களிப்பும் முக்கியமாக இருந்தது.
நாக்பூர்: அஸ்வினை மனதில் வைத்து தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்த ஆஸ்திரேலிய அணி ஜடேஜாவிடம் சுருண்டு உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்து வரும் இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 250 ரன்களாவது எடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் கணித்து இருந்த நிலையில் 177 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா சுருண்டு உள்ளது.

அதிரடி மேட்ச்
இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பின் ஸ்பின் பவுலர்கள் மட்டுமின்றி பாஸ்ட் பவுலர்கள் பங்களிப்பும் முக்கியமாக இருந்தது. இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பில் இருந்தே பிட்ச் குறித்த விவாதம் நடந்து வந்தது. இந்த பிட்ச் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று புகார் வைக்கப்பட்டது. நாக்பூர் பிட்ச் கியூரேட்டர் அபிஜீத் பிப்ரோடுடன் ராகுல் டிராவிட் இது தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் பிட்சில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிட்சில் குறைவான புற்கள் இருக்கும், பிட்ச் பெரும்பாலும் வறண்டு, பிளாட்டாக இருக்கும் வகையில் பிட்ச் மாற்றப்பட்டது.

பிட்ச் மாற்றம்
இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ஹோம் அணிகள் தங்களுக்கு ஏற்றபடி பிட்சை வடிவமைப்பது வழக்கம்தான். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் ஒரு பக்கம் புற்களை செதுக்கி அவர்களுக்கு ஏற்றபடி பிட்ச் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் நாக்பூர் பிட்சை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இருப்பினும் இந்தியா அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் களமிறங்கியது.

பிட்ச்
ஆனால் இன்று தொடக்கத்திலேயே ஸ்பின் பவுலர்கள் மட்டுமின்றி பாஸ்ட் பவுலர்களும் ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுத்தனர். இரண்டாவது ஓவர் வீசிய சிராஜ் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் ஷமி வீசிய பந்தில் போல்ட் ஆனார். வார்னர், குவாஜா இரண்டு பேருமே இன்று அவுட்டாக காரணம் பந்து போதுமான அளவில் பவுன்ஸ் ஆகவில்லை. ஆஸ்திரேலிய பிட்ச் நினைப்பதில் அதிக பவுன்ஸ் ஆகும் என்று எதிர்பார்த்து பேட்ஸ்மேன்கள் ஆடினார்கள். ஆனால் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை. இதனால் சரியாக டெக்கில் பந்து விழுந்தது.

அவுட்
இதை கணிக்க தவறிதான் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் இரண்டு பேருமே விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், சமி, சிராஜ் துல்லியமான லைனில் போட்டு ஆஸ்திரேலியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். 20 ஓவருக்கு பின்தான் அஸ்வின் பவுலிங் போடவே வந்தார். இது ஸ்பின் பிட்ச் என்றாலும் அதற்கு முன் பாஸ்ட் பவுலர்கள் ஓவரிலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை கணிக்க முடியாமல் கடுமையாக திணறவே செய்தனர். அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்ள அஸ்வின் போலவே பவுலிங் செய்யும் வீரரை எல்லாம் வைத்து ஆஸ்திரேலியா பயிற்சி எடுத்தது.

கவனிக்கவில்லை
ஆனால் அவர்கள் ஜடேஜாவை அவுட் ஆப் சிலபஸில் விட்டு விட்டனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா முதல் போட்டியிலேயே துல்லியமாக ஸ்பின் செய்தார். அவரின் பந்து இன்று பெரிதாக பவுன்ஸ் ஆகாததுதான் அவர் பிரஸர் போட முக்கியமான காரணமாக இருந்தது. அவரின் பவுலிங் மிகவும் தாழ்வாக வந்து ஸ்விங் ஆனது. வறண்ட பிட்சை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர் பவுலிங் செய்த விதம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. லன்ச் முடித்துவிட்டு தூக்க கலக்கத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களை பெவிலியனில் போய் நல்லா ஏசியில் தூங்குங்கள் என்று ஜடேஜா அடுத்தடுத்து அனுப்பி வைத்தார்.

அஸ்வின்
லபுசேன், ஸ்மித், ரென்ஸா, ஹான்ஸ்காம்ப் என்று ஆஸ்திரேலியாவின் டாப் வீரர்களை ஜடேஜாதான் அடுத்தடுத்து சுருட்டினார். அதன்பின் வந்த அஸ்வினும்.. நீ பெரிய தலைகாட்டுனா.. நானும் பெரிய தலைக்கட்டுதான் என்று அலெக்ஸ், கம்மின்ஸ், போலண்டு ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் - ஜடேஜா ஜோடியிடம் மாட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் பாகுபலியிடம் மிரண்டு ஓடிய காலகேயர்கள் போல லன்ச் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பெவிலியனுக்கு மூட்டை கட்டினார். இன்னொரு பக்கம் இளம் வீரர் பாரத்தும் கீபிங்கில் ஸ்டம்பிட் செய்து அசத்தினார். குறைந்தது 250 ரன்களாவது எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா இதனால் 177-10 ரன்களுக்கே சுருண்டு உள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications