மாறும் இந்தியா! இனி இந்துக்களுக்கே முன்னுரிமை.. ராமர் கோவில் விழா! சர்வதேச மீடியாக்கள் சொன்னது என்ன?
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது பற்றி சர்வதேச ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வு தொடர்பாக வெவ்வேறு வகைகளில் சர்வதேச ஊடகங்கள் கவரேஜ் செய்துள்ளன.
அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

சர்வதேச ஊடகங்கள்: இந்த நிகழ்வை சர்வதேச ஊடகங்கள் வெவ்வேரு வகைகளில் கவர் செய்துள்ளன. உதாரணமாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்.. மோடி ஒரு மாபெரும் கோவிலை திறந்து வைத்துள்ளார்... இது இனி இந்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய வெற்றி பயணம் என்று குறிப்பிட்டு உள்ளது.
அதில், இஸ்லாமியர்களின் பழமையான மசூதிக்கு இடிக்கப்பட்ட தளம் ஒன்றில் இந்த மசூதி கட்டப்பட்டு உள்ளது என்று இந்த கட்டுரையின் முன்னுரை தெரிவித்துள்ளது.

இன்னொரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் ராமர் கோவில் ஏன் முக்கியம் என்று குறிப்பிட்டு உள்ளனர். அதில், இந்துத்துவாவின் அரசியல் வெற்றியை, மத ரீதியான வெற்றியை பறைசாற்றும் விதமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டு கால வாக்குறுதியை தனது கோவில் திறப்பு விழாவின் மூலம் நிறைவேற்றினார், இது அவரது இந்து தேசியவாத அடித்தளத்தை பலப்படுத்தும். இந்துக்களின் வாட்டிகன் என்று அழைக்கப்படும் கோவில் ஆகும் இது. ஆனால் இது ஒரு வன்முறையான கடந்த காலத்தின் நினைவுகளையும் கொண்டது.

என்ன சொல்கின்றன?: எடிஷன் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம், இந்துக்களின் தேசிய கோவில் இது என்று ஆதித்யநாத் குறிப்பிட்டதை முன்னிருந்து செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த கோவில் கட்டப்பட்ட வரலாறு, பின்னணி யை வர்ணித்து உள்ளது.
DW ஊடகம் வெளியிட்ட செய்தியில், இந்துத்துவாவின் வெற்றியை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி இந்த கோவிலை திறந்து வைத்துள்ளார். மசூதி இருந்த இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்.. அங்கே முன்னர் கோவில் இருந்து இடிக்கப்பட்டதாக ஒரு சாரார் நம்புவதையும் விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவிலைத் திறந்து வைத்தார், இது அவரது இந்து தேசியவாத அரசியலின் வெற்றியை குறிக்கிறது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வமற்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார் என்று டான் DAWN ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
கோவில்: இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications