8 பெட்டிகள் தடம்புரண்டும் யாருக்கும் காயமில்லை! அசாம் ரயில் விபத்தில் சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி?
திஸ்பூர்: அகர்தாலா லோக்மான்ய திலக் விரைவு ரயில் அசாம் மாநிலம் திபலாங் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டன. எனினும், இந்த விபத்தில் ரயிலில் பயணித்தவர்களுகு பெரியளவில் காயம் ஏற்படவில்லை. ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து மும்பை செல்லும் அகர்தலா - லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் (12520) ரயில் இன்று காலை அகர்தலாவில் இருந்து புறப்பட்டது. அசாம் மாநிலத்தில் உள்ள லும்டிங் - பதர்பூர் மலைப் பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் 3:55 மணியளவில் இந்த ரயில் திடீரென தடம் புரண்டது.

8 பெட்டிகள் தடம் புரண்டன: தடம் புரண்ட பெட்டிகளில் ரயிலின் பவர் கார் மற்றும் என்ஜினும் அடக்கம். எனினும், இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்படவில்லை. ரயில் விபத்து ஏற்பட்டது உடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து நிவாரண ரயில் மற்றும் விபத்து நிவாரண மருத்துவ ரயில் ஆகியவை லும்டிங்கில் இருந்து சம்பவ இடத்திற்குச் சென்றன. மேலும், லும்டிங் - பதர்பூர் இடையே சிங்கிள் லைன் வழித்தடத்தில் ரயில் சேவையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
ரயில்வே போலீசார் விசாரணை: ரயில் பெட்டிகளை அகற்றி போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வருகிறது. தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெதுவாக வந்த ரயில்: ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. ரயில் மெதுவாக வந்ததும், ரயில் தண்டவாளத்தில் இருந்து சரிந்ததுமே நிறுத்தப்பட்டதும் பெரியளவில் சேதம் ஏற்படாததற்கு காரணம் என கூறப்படுகிறது. ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் முதல்வர் விளக்கம்: ரயில் விபத்து ஏற்பட்டது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "12520 அகர்தலா - எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று 15:55 மணிக்கு லும்டிங் அருகே உள்ள திபாலாங் நிலையத்தில் தடம் புரண்டன. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை, அனைவரும் பத்திரமாக உள்ளனர்.
நாங்கள் ரயில்வே அதிகாரிகளுடன் மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். நிவாரண ரயில் விரைவில் அந்த இடத்தை அடையும். லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126 தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் விபத்தில் சிக்கியது உண்மை தான். ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
திரிபுரா முதல்வர் ட்வீட்: "லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதைக் கேட்டு நிம்மதி அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக, குறைந்த வேகத்தில் சென்றதால் விபத்தின் தாக்கம் குறைவாக உள்ளது, மேலும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை" என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் - தர்பங்கா செல்லும் பாக்மதி பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பயணிகள் சிலர் படுகாயமடைந்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications