குமரியை மிரட்டிய ஓகி மும்பை அருகே வலுவிழந்து எப்படி... நாசா வெளியிட்ட புயலின் பாதை!
குமரியில் இருந்து மும்பைக்கு ஓகி புயல் எப்படி சென்றது என்று நாசா புகைப்படம் வெளியிட்டு விளக்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: நவம்பர் 30ம் தேதி குமரியை தாக்கிய ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக மும்பை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் இந்த புயலின் பாதை தடம் குறித்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருக்கிறது.
இந்த புகைப்படத்தில் புயலின் பாதை மிகவும் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அது எப்படி கொஞ்சம் கொஞ்சம் வலுவிழந்தது என்றும் கூறியுள்ளது.
அதே சமயத்தில் ஓகி புயல் மும்பையையும், கன்னியாகுமரியையும் எப்படி எல்லாம் மிரட்டி இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாகி இருக்கிறது.

குமரியில் மையம் கொண்ட ஓகி
இந்த வருட மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயரை பெற்று உருவானது ஓகி புயல். இந்த புயல் கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையில் தான் முதலில் உருவானது. இந்த புயல் நொடிக்கு நொடி வலுவடைந்து கொண்டே சென்றது. அங்கு 160கிமீ வேகத்தில் காற்று கொடூரமாக வீசியது. இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.

புயல் நகர்ந்தது
இந்த நிலையில் தற்போது நாஸாவின் 'ஆகுவா' சாட்டிலைட் இந்த புயலின் பாதை குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்தில் புயல் எப்படி குமரியில் இருந்து மும்பை நோக்கி நகர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அரபிக் கடலில், மும்பைக்கு வெளியே எப்படி புயல் நிலையாக நிற்கிறது என்று காட்டப்பட்டுள்ளது.

மும்பையை தாக்கியது
அதேபோல் மும்பையை அந்த புயல் எப்படி தாக்கியது என்று இரண்டாவது புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. மும்பைக்கு வெளியே இருந்த பபுயல் மும்பைக்கு உள்ளே சென்று இருக்கிறது. ஆனால் அரபிக் கடலில் இருந்ததை போல வலுவான புயலாக இல்லாமல் மும்பைக்கு சென்றதும் கொஞ்சம் வலு இழந்து இருக்கிறது.

பாதிப்பு
இந்த புயல் மும்பைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 2015க்கு பின் மும்பையை தாக்கிய மிகவும் வலிமையான புயல் ஓகிதான் எனப்படுகிறது. இந்த புயல் அதிர்ஷ்டவசமாக மும்பையின் நிலப்பகுதிக்குள் சென்ற உடனே தன்னுடைய வலிமையை மொத்தமாக இழந்து இருக்கிறது. ஒருவேளை படத்தில் அரபிக் கடலில் இருப்பது போல மும்பையிலும் புயல் அதே வலுவுடன் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications