எலி வளை டெக்னிக்! பெரிய எந்திரங்கள் செய்ய முடியாததை செய்த மனித பலம்? சுரங்க ஊழியர்களை மீட்பது எப்படி
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க எலி வலை டெக்னிக் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்தது.
சிரமம்; உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் கடந்த 17 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேல் பக்கம் மற்றும் கிடைமட்டமாக இரண்டு துளையிட்டு அது வழியாக ட்யூப் போட்டு.. அதில் இருந்து ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
உள்ளே ஏற்கனவே சுரங்கம் அமைப்பதற்காக போடப்பட்ட இரும்பு வளையங்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அங்கே மீட்பு பணிகளை செய்வது சிரமம் ஆனது. இதனால் கிடைமட்டமாக துளை போடும் பணிகள் நிறுத்தப்பட்டது.
பிளான் பி சொதப்பல்: என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, அவர்கள் தொழிலாளர்களை அடைந்ததும், ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பிளான் சொதப்பியது.
கிடைமட்டமாக துளை போட போட மேலும் சரிவுகள் ஏற்படுகிறது. மேலும் பாறைகள் விழுகிறது. அதோடு சுரங்கத்தில் துளை போடுவதற்காக எந்திரங்களை வைக்கும் இடமும் சரிந்து விழுகிறது. இதனால் அந்த பகுதியை மொத்தமாக மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பிளான் பி கையில் எடுக்கப்பட்டது. பிளான் பியில் மேல் பகுதியில் இருந்து துளை போடும் முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கும் கான்கிரீட் நிற்காத காரணத்தால் துளை போடும் முடிவு கைவிடப்பட்டது.
பிளான் சி ஆரம்பம்: இந்த நிலையில்தான் எலி வளை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்களை மீட்கும் முடிவை கையில் எடுத்தனர். சுரங்கம் தூண்டுவதில் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்ட சுரங்க நடைமுறையான "எலி வளை டெக்னிக்" உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை காக்க களமிறக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன் அளிக்காத நிலையில்.. ஊழியர்கள் கையால் சுரங்கம் தோண்டி.. குழாய் அமைத்து.. குழாய் வழியாக ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.
எலி துளை சுரங்கம் என்பது 4 அடிக்கு மேல் அகலமில்லாத மிகச் சிறிய குழிகளைத் தோண்டி பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையாகும். இதற்காக கையாலேயே சுரங்கம் தோண்டி அதற்கு உள்ளே குழாய் அமைத்து.. குழாய் வழியாக நிலக்கரியை எடுத்த பின் ஊழியர்கள் உள்ளே சென்று வெளியே வருவார்கள். இந்த குழாய்கள் சிறியதாக இருக்கும் என்பதால் பாதுகாப்பற்றது அதேபோல் குழந்தைகள் அதிகம் இதில் பயன்படுத்தப்படலாம், உள்ளேயே சிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் தடை செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வரை மேகாலயாவில் இந்த முறைதான் சுரங்கம் தோண்ட அதிகம் பயன்படுத்தப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014-ல் எலி துளை சுரங்கத்திற்கு அறிவியல்பூர்வமற்றது என்று தடை விதித்தது. இந்த முறையை தற்போது பாதுகாப்பான முறையில் செய்து ஊழியர்களை வெளியே கொண்டு வந்தனர். சிறிய குழாய் அமைத்து அது வழியாக ஊழியர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications