ஜெட்லி பேசாமல் முழுசா ஆங்கிலத்திலேயே பேசலாமே?
பட்ஜெட்டை பொருத்தவரையில் வரி உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறும் நிலையில் ஆங்கிலத்தில் படித்தாலே அதனை புரிந்து கொள்வது கடினம், இதில் இந்தியில் பட்ஜெட் உரை நிகழ்த்தினால் யாருக்கு பயன்?
டெல்லி : இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பட்ஜெட் முழுமையாக ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனால் முதல் முறையாக இன்று இந்தியிலும், ஆங்காங்கே ஆங்கிலத்திலுமாக பேசி வருகிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை என்ற சிறப்போடு இந்த பட்ஜெட்டில் கூடுதல் சிறப்பு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி இந்தியில் பட்ஜெட் உரையை நிகழ்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் குழப்பம் ஏற்பட்டது. காலம் காலமாக பட்ஜெட் உரை ஆங்கிலத்தில் தான் வாசிக்கப்படுகிறது, இதன் மொழிபெயர்ப்பு இந்தி, உருது உள்ளிடட மொழிகளில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் நடைமுறைகளை உடைத்து முதன்முறையாக அருண்ஜேட்லி இந்தியில் பட்ஜெட் உரை நிகழ்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுமையாக இந்தியில் இல்லாமல், இடை இடையே ஆங்கிலத்திலும் பேசி வருகிறார் ஜெட்லி. இதனால் ஓரளவு குழப்பம் தீர்ந்துள்ளது. அதேசமயம், (வட இந்திய) விவசாயிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பதால் அவர்களை எளிதில் சென்று சேரும் வகையில் பட்ஜெட் உரை இந்தியில் வாசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் உரையில் 202 பாராக்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது, இது அவருடைய உரையிலேயே இரண்டாவது மிகப்பெரிய உரையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய பட்ஜெட் நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications