சமாஜ்வாதி - பகுஜன் சமாஜை இணைத்த ஒருவருட யோகி ஆட்சி.. பாஜகவை அடியோடு வீழ்த்திய கூட்டணி!
உத்தரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி பெரிய அளவில் உழைத்து இருக்கிறது.
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி பெரிய அளவில் உழைத்து இருக்கிறது. மக்கள் மனநிலையே இதனால் மாற்றப்பட்டு உள்ளது.
கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து இருக்கிறது. அம்மாநில முதல்வரும், துணை முதல்வரும் எம்பிக்களாக இருந்த தொகுதி ஆகும் இது.
தற்போது அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதால் பாஜகவின் தொடர் வெற்றியில் பெரிய இடி விழுந்து இருக்கிறது.

பிரச்சனை
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது. இது யாதவ் இன மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் கலவரத்தை கூட ஏற்படுத்தி இருக்கிறது. 30 வருடங்களுக்கும் மேலாக இரண்டு குழுவும் எலியும் பூனையுமாக இருந்தார்கள்.

சேர்ந்தார்கள்
ஆனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை அறிவிக்கபோவதில்லை என்று கூறியது. மேலும் சமாஜ்வாதி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மாயாவதி பேட்டி அளித்து இருந்தார்கள். இரண்டு கட்சி தொண்டர்களையும் இது இணைத்தது.

வேலை
தமிழகத்தில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகள் ஒன்றாக வந்து, ஒரே வேட்பாளருக்கு வாக்கு கேட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் உ.பியில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு இரண்டு கட்சி தொண்டர்களும் வாக்கு கேட்டார்கள். இது அங்கு இருக்கும் மக்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக செய்த நன்மை
30 வருடத்திற்கும் மேலான ஜாதி பிரச்சனை, அரசியல் காழ்ப்புணர்வு ஒருவருட யோகி ஆட்சியால் முடிவுக்கு வந்து இருக்கிறது. மக்கள் பலர் வெளிப்படையாக அம்மாநில தொலைக்காட்சியில் யோகிக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார்கள். இது நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications