உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்.. இந்துக்களுக்கும் பல உரிமைகளை பறிக்கிறதா? சரத்துகள் சொல்வது என்ன?
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள பொது சிவில் சட்டம் குறித்து நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டதுதான் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம். நடைமுறையில் இந்த சட்டம் இந்த சமூகத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

1) பழங்குடிகளுக்கு பொருந்தாது
பழங்குடிகள் இந்து சமூகத்தின் முதன்மை அங்கம். இந்து சமூகத்தில் இருந்து பழங்குடிகளை மட்டும் தனிமைப்படுத்துவது என்பது இந்து சமூகத்தை பிளவுபடுத்தக் கூடியது. பழங்குடிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதாலேயே பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளனர். இது அப்பட்டமான அரசியல் நடவடிக்கை. பொது சிவில் சட்டம் அனைத்து சமூகம், மதங்களுக்கு பொதுவானது ஆனால் பழங்குடி மக்களுக்கு விதி விலக்கானது என்பதே பொது சிவில் சட்டம் என்ற சொல்லையே கேள்விக்குள்ளாக்குகிறது
2) இந்து வாரிசுரிமை சட்ட திருத்தம்
பொதுவாக பரம்பரை சொத்து, சுயசம்பாத்திய (சுயாஜித) சொத்துகள் என்கிற இரு வகைகள் இந்து சமூகத்தின் சொத்து விவகாரங்களில் முன்வைக்கப்படும். இந்து குடும்பங்களில் பெண்களுக்கான சொத்து உரிமை என்பது காலந்தோறும் விவாதிக்கப்பட்டு பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கூட்டு குடும்ப சொத்தில் மகன்களுக்கு என்ன பங்கு உள்ளதோ அதுவே மகள்களுக்கும் உரித்தானது என்பது நிலைமை. 1989-ல் தமிழ்நாடு அரசுதான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. 2005-ல் தேசிய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றமும் பெண்களுக்கான சொத்துரிமையை உறுதி செய்தது. தற்போதைய உத்தரகாண்ட் பொது சிவில் சட்டமானது பரம்பரை சொத்து, சுய சம்பாத்திய சொத்து என்பதையெல்லாம் ஒன்றாக கூட்டு குடும்ப சொத்து என வகைப்படுத்திவிடுகிறது. பரம்பரை, சுய சம்பாத்திய சொத்துகளில் அனைவருக்கும் சொத்து உரிமையை உறுதி செய்கிறது இச்சட்டம். அதாவது வாரிசுரிமை சட்டம், சொத்து உரிமை சட்ட திருத்தங்கள் அனைத்தும் பரம்பரை, சுய சம்பாத்திய சொத்துகளுக்குப் பொருந்தும் என்கிறது உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்.
மேலும் ஒரு மகன் இறந்துவிட்டால் அவரது சொத்துகள் விதவை மனைவி, குழந்தைகள் தாய் ஆகியோர் வாரிசுதாரர்கள் என்கிறது இந்து சொத்துரிமை சட்டம். தந்தையை இந்த வாரிசுரிமை பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டமானது மகன் இறந்துவிட்டால் அவரது சொத்துகளின் வாரிசுதாரர்கள் பட்டியலில் விதவை மனைவி, குழந்தைகள், தாய் மற்றும் தந்தையும் இடம்பெறுவார் என்கிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில உயர்நீதிமன்றங்கள் மகன் இறந்துவிட்டால் விதவை மனைவி, குழந்தைகள் மட்டுமே சொத்துகளின் வாரிசுதாரர்கள், தாய்க்கு கூட பங்கு இல்லை என தீர்ப்பளித்திருக்கிறது. வாரிசுரிமை விவகாரத்தில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலையில் திடுதிப்பென சொத்துகளில் அத்தனை பேருக்கும் பங்கு என சட்டம் கொண்டு வருவது ஒட்டுமொத்த சமூகத்தின் இயல்பு வாழ்க்கையில் பெரும் அசாதாரண நிலைமைகளை கிராமப்புறங்களில் பெரும் மோதல்களை ஏற்படுத்தக் கூடிய பேரபாயம் கொண்டது.
3) அத்தை/ மாமா மகன் மகள்களை திருமணம் செய்யும் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தென்னிந்திய இந்து சமூகங்களில் வாழ்வியல் முறையின் அடிப்படையையே கேலிக்கூத்தாக்கி விட்டிருக்கிறது இந்த சரத்து. அத்தை, மாமா உறவில் மகன், மகள்களை மட்டும்தான் தென்னிந்திய சமூகம் திருமணம் செய்து கொள்ளவே முடியும். இதை சட்டவிரோதம் என்கிறது உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம். இந்த நடைமுறை தென்னிந்தியாவில் மட்டுமல்ல திராவிடர் மரபினத்துடன் தொடர்புடைய வட இந்திய இந்து சமூகத்திலும் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இது ஒட்டுமொத்த சமூக அமைதியையும் இயல்பு வாழ்க்கையையுமே சீர்குலைக்கக் கூடியதாகும். நெருங்கிய உறவுகளிடையேயான திருமணம் வட இந்திய மாநிலங்களில் ஏற்க முடியாதது. அதை அடிப்படையில் மட்டுமே உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது எப்படி இந்துக்களுக்கான பொது சிவில் சட்டம் என்பது புரியவில்லை.
இத்தகைய குழப்பங்களானது எடுத்தேன் கவிழ்த்தேன் என பொது சிவில் சட்டத்தை செயல்படுத்திவிட முடியாது; நாடாளாவிய பரந்துபட்ட விவாதங்கள் நடத்தப்பட்டாலும் கூட பொது சிவில் சட்டம் நிச்சயம் இந்திய சமூக அமைப்பில் சாத்தியமானதுதானா? என்கிற கேள்வியையே உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது என்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications