ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்.. ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து நடந்தது எப்படி? நெஞ்சே பதறுதே
அமராவதி: ஆந்திராவில் இன்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன. இதில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒரே தண்டவாளத்தில் எப்படி 2 ரயில்கள் வந்தன. விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி சென்ற ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கின.

அதாவது அந்த மாவட்டத்தின் கண்டகப்பள்ளி கிராமத்தின் வழியே செல்லும் தண்டவாளத்தில் இந்த 2 ரயில்களும் மோதிக்கொண்டன. இதில் ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் அதில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர். மேலும் ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர்.
அப்போது தடம் புரண்ட பெட்டியில் காயமடைந்து இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சில பயணிகள் படுகாயம் அடைந்து இருந்தனர். முதலில் 3 பயணிகள் பலியாகி இருந்த நிலையில் 9.15 மணியளவில் மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது? ஒரே நேரத்தில் 2 ரயில்கள் எப்படி தண்டவாளத்தில் வந்தன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் கந்தகப்பள்ளி கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென்று பிரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த பாலசா எக்ஸ்பிரஸ் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் தற்போது வரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications