டெல்லியில் ஆட்டம், பாட்டத்துடன் வண்ணமயமாக நடந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி
டெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பாட்டு பாடி, நடனமாடினர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்று சேர உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஓரினச்சேர்க்கையாளர்கள் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பல வண்ணங்களில் பலூன்களை வைத்திருந்தனர். முகத்தில் முகமூடி அணிந்தும், தலையில் வண்ணமயமான விக்குகள் அணிந்தும் சென்றனர். அவர்கள் பாட்டு பாடிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் நான் ஓரினச்சேர்க்கையாளன், அது பரவாயில்லை என்று எழுதப்பட்ட பேனர்களை ஏந்திச் சென்றனர்.

ஓரினிச்சேர்க்கையாளர்கள் உறவு கொள்வது தவறு இல்லை என்று 2009ம் ஆண்டில் நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது. இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொள்வதற்கு தடை விதித்துள்ள குற்றவியல் சட்டம் 377-ஐ நாடாளுமன்றம் தான் வாபஸ் பெற முடியும், நீதிமன்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த சட்டத்தை மோடி அரசு வாபஸ் பெறாது என்று பேரணியில் கலந்து கொண்ட பலர் கருதுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications