ஏமாற்றிய கணவனுக்கு “கேர்ள்பிரண்டாய்” நடித்து போலீசிடம் சிக்க வைத்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: குடும்பத்தை பிரிந்து சென்று வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை மனைவி பெண் நண்பியாக நடித்து போலீசில் பிடித்து கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அமித். தூரத்து சொந்தமான ஸ்மிதாவை அவர் 2010ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சந்திக்க மறுத்த அமித்:

இந்த நிலையில் நேபாளத்தில் இருந்த அமித் ஸ்மிதாவை எந்த தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்மிதா தொடர்பு கொண்ட போதும் அமித் அதை தவிர்த்து வந்துள்ளார்.

ஸ்மிதா திட்டம்:

இதனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டது தெரிந்ததால் அவரை போலீசில் சிக்க வைக்க ஸ்மிதா திட்டமிட்டார். சினிமா பாணியில் புதிய வழி ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தார்.

செல்போன் நண்பி:

இதையடுத்து புது செல்போன் நம்பரிலிருந்து தனது கணவரின் போனுக்கு தொடர்பு கொண்டார். தனது மனைவி என்று தெரியாமல் அமித் அவருடன் நட்பை வளர்த்து வந்தார். கடந்த 5 மாதங்களாக இவர்கள் செல்போனில் நட்பு வளர்த்து வந்துள்ளனர்.

காதலியைப் பார்க்க ஆவல்:

ஒரு நாள் அமித்தை நேரில் பார்க்க வேண்டும் என ஸ்மிதா கூறியுள்ளார். இதையடுத்து புது காதலியை பார்க்கும் ஆர்வத்தில் உத்திர பிரதேசம் கோரக்பூருக்கு உடனடியாக புறப்பட்டு வந்தார் அமித்.

கைது செய்த போலீசார்:

ஏற்கனவே போலீசாருடன் அங்கு புறப்பட்டு வந்தார் ஸ்மிதா. அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் அமித். அதை தொடர்ந்து மனைவியை கொடுமைப்படுத்தியதாக அமித் கைது செய்யப்பட்டார்.

மாட்டி விட்ட மனைவி:

சினிமா பாணியில் கணவரை நைசாக வரவழைத்து போலீசில் மனைவி மாட்டி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+