நில அபகரிப்பு வழக்கு: முகேஷ் அம்பானிக்கு ஹைதராபாத் ஹைகோர்ட் நோட்டீஸ்!!
ஹைதராபாத்: நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் சக்கா துர்கம்பா. இவருக்கு காக்கிநாடாவில் 8.23 ஏக்கர் நிலம் உள்ளது.

சக்கா துர்கம்பா ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
எனக்கு சொந்தமாக காக்கிநாடாவில் உள்ள நிலத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் தவறான ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்காததால் காக்கிநாடா முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்மனு செய்தேன்.
ஆனால் எனது மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் எனது மனுவை ஏற்று விசாரித்து எனக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு சக்கா துர்கம்பா கூறியிருந்தார்.
இம் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி துர்க்கா பிரசாத்ராவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் அடுத்த விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications