For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்றோரின் அலட்சியம்.. பூட்டிய காரில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை!

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் காலை உணவு சாப்பிட சென்றதால் குழந்தை வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹைதராபாத்திருந்து பெங்களூருக்கு ஒரு தம்பதியினர் காரில் சென்றுள்ளனர். புதன்கிழமை காலையில், சம்சாபாத் அருகே வந்த போது காலை உணவுக்காக ஓட்டல் முன்பு நிறுத்தியுள்ளனர்.

Hyderabad parents leave 3-year-old girl in locked car

அப்போது அந்த தம்பதியின் மூன்று வயது குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டுவிட்டு இருவரும் உணவருந்த ஓட்டலுக்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து குழந்தை எழுந்து அழ ஆரம்பித்துள்ளது. இதானால் அந்த காரை சுற்றி கூட்டம் கூடியது.

Hyderabad parents leave 3-year-old girl in locked car

உணவருத்திவிட்டு வந்த அந்த பெற்றோர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு நீண்ட போராட்டத்திற்கு பின் அங்கிருந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர். பெற்றோரின் அஜாக்கிரதையால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோகியிருக்கும். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
A three-year-old girl was rescued by locals after she was left locked inside a parked car, while her parents were allegedly eating breakfast on the outskirts of Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X