சத்யம் கம்ப்யூட்டர் மோசடி வழக்கு... 26-ம் தேதி தீர்ப்பு- சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வழக்கில் வரும் ஜூன் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
ரூ 14 ஆயிரம் கோடிக்கு மேல் பங்குதாரர்களுக்கு இழப்பையும், பல ஆயிரம் பணியாளர்கள் வேலை இழப்பையும் ஏற்படுத்திய மோசடி அது.
இப்போது நிறுவனம் இல்லை. அது மஹிந்திரா நிறுவனத்துக்கு கைமாறி, மகிந்திரா சத்யம் ஆகிவிட்டது.

மோசடி
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடந்ததை அதன் நிறுவனரும் தலைவருமான ராமலிங்க ராஜூவே 2009, ஜனவரி மாதம் ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டார்.

கைது
இந்த மோசடி அம்பலத்துக்கு வந்த இரு தினங்களில் ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவர் தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குறித்த நேரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ராமலிங்க ராஜூ உள்பட அனைவரும் விடுதலையாகிவிட்டனர்.

5 ஆண்டுகள்...
ஹைதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மறுப்பு
குற்றத்தை முதலில் ஒப்புக் கொண்டு அறிக்கை தந்த அதே ராமலிங்க ராஜு, விசாரணையின் போது அதை மறுத்தார். சிபிஐ வழக்கை ஜோடித்ததாகக் கூறினார். தான் நிரபராதி என்று இப்போது கூறி வருகிறார்.

தீர்ப்பு நாள்
இறுதிக்கட்ட விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தையடுத்து தீர்ப்பு வழங்கும் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பு ஜூன் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சக்ரவர்த்தி அறிவித்தார். தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட போது, சத்யம் ராமலிங்க ராஜு உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications