ஹைதராபாத்தில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி 17 மாதங்களாக சீரழித்த கேன்டீன் உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கல்லூரி கேன்டீன் உரிமையாளரால் கடத்தி கடந்த 17 மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவியை அந்த கல்லூரி கேன்டீன் உரிமையாளரான சத்ய பிரகாஷ் சிங்(33) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியை ஒவ்வொரு வீடாக மாற்றிக் கொண்டே இருந்து கடந்த 17 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதில் கர்ப்பமான மாணவிக்கு ஒரு முறை கருகலைப்பு கூட செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி அவரிடம் இருந்து தப்பியோடி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.

இது குறித்து மாணவி தனது புகாரில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி கேன்டீனுக்கு சென்றபோது எனக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து அவர் என்னை கடத்தினார். கடந்த 4ம் தேதி அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது நைசாக தப்பித்து எனது வீட்டுக்கு சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்துமாறு ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+