ட்விஸ்ட்.. நான் கொலை செய்யவில்லை.. ஜெயில் கார்டிடம் சொன்ன கொல்கத்தா கொலைகாரன்.. திருப்பம்!
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் இன்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பொய்-கண்டறிதல் சோதனைக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் புதிய திருப்பத்தை வழக்கில் ஏற்படுத்தி உள்ளார். நான் கொலை செய்யவில்லை.. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர் .. எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.

இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த பளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
சிபிஐயிடம் அவர் தந்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
புதிய வாக்குமூலம்: இந்த நிலையில்தான் அவர் வாக்குமூலத்தை மாற்றி உள்ளார். சஞ்சய் ராய் இன்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பொய்-கண்டறிதல் சோதனைக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் புதிய திருப்பத்தை வழக்கில் ஏற்படுத்தி உள்ளார். நான் கொலை செய்யவில்லை.. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர் .. எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சிறைக் காவலர்களிடம் சஞ்சய் ராய் கூறியதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்த சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்னை வைத்து உண்மை கண்டறியும் சோதனை செய்யலாம். எனக்கு பிரச்சனை இல்லை, என்று சஞ்சய் ராய் கூறியதாக தெரிகிறது. அதே சமயம் சஞ்சய் ராய் புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். அவரது முகம் மற்றும் பிற உடல் பாகங்களில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளில் அவர் இருந்ததைக் வைத்து.. அவர் கொலை செய்தது உறுதியாகிறது.
மேலும் குற்றச் சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் அங்கே இருந்தது உறுதியாகிறது.. அதிகாலை 4.03 மணிக்கு குற்றம் நடந்த இடத்தில் அவர் இருந்ததும் உறுதியாகிறது. அப்படி இருக்க முதலில் இதை ஒப்புக்கொண்டவர்.. இப்போது மாற்றி பேசுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications