இந்திராணிக்கு பணம் தான் முக்கியம், மகளை கொன்றிருக்க வாய்ப்பு உள்ளது: ஷீனாவின் தந்தை
கொல்கத்தா: நான் தான் ஷீனா போரா, மிகைல் போராவின் தந்தை என சித்தார்த் தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவிய இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷீனா இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்துக்கு பிறந்தவர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சித்தார்த் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

ஷீனா
நான் தான் ஷீனா போரா, மிகைல் போரா ஆகியோரின் தந்தை. இதை மரபணு பரிசோதனை செய்து நிரூபிக்கத் தயாராக உள்ளேன்.

இந்திராணி
எனக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடக்கவில்லை. நானும் அவரும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்தோம். அவர் கடந்த 1989ம் ஆண்டு என்னை விட்டு பிரிந்து சென்றார். அதில் இருந்து நான் அவரை பார்த்தது இல்லை.

தந்தை
இந்திராணிக்கு எனது ஸ்டேட்டஸ் திருப்தி அளிக்காததால் பிரிந்து சென்றார். ஷீனாவுக்கு நான் தான் அவரின் தந்தை என்று தெரியும். ஷீனா 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி பிறந்தார்.

கொலை
ஷீனாவை இந்திராணி கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்திராணிக்கு எப்பொழுது பணம் பணம் பணம் தான் முக்கியம். இந்த வழக்கு விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன். நான் 1998ம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் வசித்து வருகிறேன் என்றார் தாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications