தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: குஷ்பு
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தம்மை நியமித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியுடன் குஷ்பு சந்தித்து பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

ராகுல் காந்தியை சந்தித்து தமிழக அரசியல் பற்றி விளக்கமளித்த குஷ்புவிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புது தலைவர் நியமிப்பது பற்றி ராகுல் கேட்டுள்ளார். ராகுலை சந்தி்த்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழக காங்கிரஸ் தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தம்மை நியமித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றும் குஷ்பு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான வேகத்திலேயே பிரதான அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் பணிகளை தொடங்கி விட்டன.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி தேசிய கட்சி என உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை வலுப்படுத்தும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டிருக்க காங்கிரஸ் கட்சியிலோ, மாநிலத் தலைவரே இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 25ம் தேதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். கட்சி மேலிடமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications