குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக 60 நாள்கள் விலகியிருக்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூர்: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகதான் நான் 60 நாள்கள் கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்கிறேன். மேலும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெங்களூரில் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் நேற்று காலை திடீரென மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.

மும்பையிலிருந்து டிடிவி தினகரன் பெங்களூருக்கு சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஓபிஎஸ் தலைமையில் எழுபர் குழு அமைக்கப்பட்டுள்ளதால் அது பொதுச் செயலாளர் பதவியைக் காட்டிலும் பெரிய பதவி என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த தினகரன் கூறும்போது, அதிமுக அணிகள் இணைப்புக்காக நான் 60 நாள்கள் விலகி இருக்கிறேன். அதிமுகவின் இரு அணிகளை நிச்சயம் இணைக்க முடியும்.
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. எனக்கும் திவாகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தினகரன் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications