நான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும்.. பாபா ராம்தேவ் சர்ச்சை பேட்டி
தான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும் என்று பாபா ராம்தேவ் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

கோவா: தான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும் என்று பாபா ராம்தேவ் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகி இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் திடீர் வளர்ச்சிக்கு பின் பாஜக கட்சியினர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது, தான் நினைத்து இருந்தால் பாஜக கட்சியில் சேர்ந்து இந்திய பிரதமராக மாறியிருக்க முடியும் என்று பாபா ராம்தேவ் பேட்டி அளித்துள்ளார்.

தேவையில்லை
கோவாவில் அவர் பேசிய போது ''நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் தேவைப்பட்டது இல்லை. நான் இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இப்படிப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வெள்ளையர்கள்
எனக்கு சின்ன வயதில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி மீது பெரிய கோபம் இருக்கிறது. அதனால், அவர்களை போல ஒரு இந்திய நிறுவனம் பெரிதாக வளர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் பதஞ்சலி நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தேன். இப்போது பெரிய நிறுவனமாக இது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்போது நினைத்தால் கூட முடியும்
மேலும் '' நான் நினைத்து இருந்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும் . பாஜக கட்சியில் எனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்.பியாகவோ, பிரதமராகவோ முடியும். எனக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது'' என்றுள்ளார்.

செய்ய மாட்டேன்
ஆனால் எனக்கு எப்போதும் பிரதமர் ஆக விருப்பமில்லை. எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்ததே இல்லை. நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications