இவ்வளவு கோடியா? ஒரு தேர்தல் வியூகத்துக்கான சம்பளம் இதுதான்! வாயை பிளக்க வைத்த பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரை மையப்படுத்தி அரசியல் கட்சி தொடங்கி தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒரு கட்சியிடம் இருந்து அவர் வாங்கும் கட்டணம் குறித்து முதல் முறையாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்.. நம் நாட்டின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர். இவர் பாஜக, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு முக்கிய ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி வெற்றி பெற செய்தார்.

அதன்பிறகு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும் ஆலோசனைகளை வழங்கி வெற்றி பெற செய்தார். அதேபோல் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் பிரசாந்த் கிஷோர் தான் வியூகங்கள் வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்தார்.
இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோர் பல கோடிகளை கட்டணமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதை கைவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரில் அவர் கட்சி தொடங்கி உள்ளார். அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை குறிவைத்து பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். தற்போது பிரசாந்த் கிஷோர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தான் பீகாரில் தற்போது காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நவம்பர் 23ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில் பெலாகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கார்க், தாரகி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். இவர்களுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் பெலாகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் முகமது அம்ஜாத்துக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நேற்று பிரசாரம் மேற்கொண்டு பேசினார். இஸ்லாமிய மக்களை சந்தித்து அவர் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும்படி கூறினார்.
அப்போது பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக பணிக்கு ஒரு கட்சி அல்லது அரசியல் தலைவரிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கும் தொகையை வெளிப்படையாக கூறி அனைவரையும் வியக்க வைத்தார். இதுபற்றி பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 அரசுகள் எனது பிரசார வியூகத்தால் தான் இயங்கி வருகின்றன. என்னுடைய பிரசாரத்துக்கும், மேடை அமைப்பதற்கும் போதிய அளவு பணம் இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பீகாரில், என்னுடைய கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை.
ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால் எனது கட்டணம் ரூ. 100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரே ஒரு கட்சிக்கு வியூகம் வகத்து கொடுத்தால் போதும் எனது பிரசாரத்துக்கு தேவையான நிதியை என்னால் கொடுக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications