நான் தோத்துட்டேன்.. எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போறேன்.. பிரஸ்மீட்டில் கதறி அழுத அயோத்தி எம்பி
லக்னோ: ‛‛நான் தோற்றுவிட்டேன். எனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். ராமர், சீதை எங்கு இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டு பிரஸ்மீட்டில் கதறி அழுதுள்ளார் அயோத்தியின் சமாஜ்வாதி கட்சியின் எம்பி அவதேஷ் பிரசாத். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் லோக்சபா தொகுதிக்குள் அயோத்தி சட்டசபை தொகுதி உள்ளது. அயோத்தி என்பது காலம் காலமாக முக்கிய இடமாக உள்ளது. நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது.

அயாத்தி சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக சிட்டிங் எம்பியாக இருந்த லாலு சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் களமிறங்கினார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இதில் பாஜக வேட்பாளர் லாலு சிங்கை (பெற்ற வாக்குகள் 4,99,722) 54,567 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் (பெற்ற வாக்குகள் 5,54,289) வென்றார்.
இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகள் இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை வைத்து பாஜகவை விமர்சிக்க தொடங்கினர். பாஜகவின் அயோத்தி ராமர் கோவில் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விளாசினர். இந்நிலையில் தான், ‛‛நான் தோற்றுவிட்டேன். எனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். ராமர், சீதை எங்கு இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டு பிரஸ்மீட்டில் கதறி அழுதுள்ளார் சமாஜ்வாதி கட்சியின் எம்பி அவதேஷ் பிரசாத்.
அதாவது உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வந்தார். தலித் பிரிவை சேர்ந்தவர். இவர் திடீரென்று கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டு அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் அந்த இளம்பெண் இறந்து கிடந்தார். அவரது உடல் கட்டப்பட்டு இருந்தது. கண்கள் வெளியே வந்திருந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த பெண்ணை யாரோ பலாத்காரம் செய்து கொன்று இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இருப்பினும் அந்த இளம்பெண்ணின் பிரதே பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. இதனால் போலீசார் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் போலீசார் மீதும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி கேள்வி பட்டவுடன் சமாஜ்வாதி எம்பி அவதேஷ் பிரசாத் சம்பவம் பற்றி விசாரித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை சொல்ல முடியாமல் அவர் கதறி அழுதார். அவர் அருகே இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவதேஷ் பிரசாத் கதறி அழுதார்.
அதோடு, ‛‛நான் டெல்லி செல்கிறேன். இதுபற்றி பிரதமர் மோடியிடம் கூறுவேன். நீதி கிடைக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன். இது முக்கியமான பிரச்சனை.இது பெரிய மேட்டர். .பெண் குழந்தைக்கு எப்படி இப்படியான சம்பவங்கள் நடக்கிறது? எங்கே இருக்கீங்க ராமர். எங்கே இருக்கீங்க அம்மா சீதா? '' என்று கூறினார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications