ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறப்போவதில்லை என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பிராணிகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் அஞ்சலி சர்மா தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே, அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனு வாரியத்தின் அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது எனத் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு புதன்கிழமை ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், அஞ்சலி சர்மா கூறுகையில், தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான்.
இதை விலங்குகள் நலவாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, அனுமதியோடுதான் தாக்கல் செய்தேன். இதில் வாரியத்தின் செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அஞ்சலி சர்மா, அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications