'சாவதற்கு முன்பாக சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்'; பத்திரிகையாளரிடம் சுனந்தா கூறிய கடைசி வார்த்தைகள்!
டெல்லி: சாகப்போகும் முன்பாக, சசி தரூர் பற்றிய உண்மைகளை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்திவிட்டுதான் சாவேன் என்று மறைந்த சுனந்தா புஷ்கர் பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பான விசாரணை, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வேகம் பிடித்துள்ளது.

விஷம் கொடுத்து கொலை
சுனந்தா, வெளிநாட்டு விஷத்தை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக டெல்லி மருத்துவமனை பிரேத பரிசோதனை ஆய்வு உறுதி செய்துள்ளது. எனவே மர்மசாவு என்ற கோணம் மறைந்து, கொலை என்ற கோணத்தில் டெல்லி போலீஸ் விசாரிக்கிறது.

ஐபிஎல் சூதாட்டம்
சுனந்தா சாவுக்கு முன்பாக, ஐபிஎல் சூதாட்டம், முறைகேடுகள் தொடர்பாக அதிகம் டிவிட் செய்து வந்தார். எனவே, ஐபிஎல் சூதாட்ட நிழலுலக தாதாக்களும் இவரது கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராகுல் கன்வால்
இந்நிலையில்தான் பிரபல ஆங்கில செய்தி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையாளர் ராகுல் கன்வாலிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணை தகவல்கள் கசிந்துள்ளன.

பேட்டிக்கு ஓகே
போலீசாரிடம் ராகுல் கன்வால் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சுனந்தா புஷ்கர் ஐபிஎல் முறைகேடுகள் குறித்து டிவிட் செய்து வந்ததை பார்த்து, அதுகுறித்து அவரிடம் சிறப்பு பேட்டி வாங்க திட்டமிட்டேன். இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதும், உடனடியாக நேர்காணலுக்கு சம்மதித்தார். அது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

உலகத்திற்கு காண்பிப்பேன் என்றார்
"நான் டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எப்படியிருந்தாலும் சாகத்தான் போகிறேன். நான் சாவதற்கு என்பாக, சசிதரூர் குறித்து வெளி உலகத்திற்கு காண்பித்துவிட்டுதான் சாவேன்", என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் சுனந்தா இறந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு ராகுல் கன்வால் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications