தானாக முன்வந்து ரூ. 13,860 கோடியைக் கணக்கில் காட்டி சிக்கிக்கொண்ட குஜராத் "கறுப்புப் பண முதலை"!
அகமதாபாத்: கணக்கில் வராத ரூ.13000 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்த குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறது.
தானாக முன்வந்து கருப்பு பணத்தை அறிவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்திருந்தது. இந்த திட்டத்தின்கீழ், குஜராத்தை சேர்ந்த மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் தன்னிடம் கணக்கில் காட்டாத, ரூ.13,860 கோடி சொத்து இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், அகமதாபாத்திலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று ஐடி ரெய்டு நடத்தியுள்ளது. வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் பற்றி அறிவிப்பவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில், ஐடி ரெய்டு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி ரெய்டு நடத்தியதற்கு காரணம் பற்றி ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகேஷ் ஷா அறிவித்த கருப்பு பணத்திற்கான அபராத வட்டி தொகையான ரூ.975 கோடியை செலுத்தவில்லையாம். அபராத வட்டி தொகையை நவம்பர் 30க்குள் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர் கோட்டை விட்டுள்ளார். எனவே ஐடி துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். பல்வேறு ஆவணங்கள் அவர்களிடம் சிக்கியுள்ளதாம்.
ஒருவேளை அவர் வ ரியை சரியாக செலுத்தியிருந்தால், ஐடி ரெய்டு நடத்தியிருக்காது என்கிறார்கள். வருவாய்க்கு அதிகமாக சேர்த்துள்ளதாக அவர் அறிவித்த இந்த பணம் மற்றும் சொத்து அவருடையது மட்டுமல்ல, வேறு பலருடையதும்தான் என்பதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் ஐடி துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications