இரட்டை இலை லஞ்ச புகாரில் சிக்கிய சுகேஷை தெரியுமா… ஐ டெல் யூ லேட்டர்.. தினகரன் அசால்ட் பதில்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள சுகேஷை தெரியுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘ஐ டெல் யூ லேட்டர்’ என்று தினகரன் அசால்ட் பதில் அளித்துள்ளார்.
டெல்லி: சுகேஷைப் பற்றி அப்புறம் சொல்கிறேன் என்று டெல்லியில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திராசேகர் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

5 நாட்கள் போலீஸ் கஸ்டடி
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோரை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

சென்னையில் விசாரணை
விசாரணையின் ஒரு பகுதியாக டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்த போலீசார், ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், பெரம்பூர், திருவேற்காடு, தினகரனின் அடையாறு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சம்மன்
தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.

மீண்டும் டெல்லி
மேலும், தினகரனின் வழக்கறிஞர் மோகன் ராஜ் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சென்னை விசாரணையை முடித்துக் கொண்ட டெல்லி உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸார், தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்டனர்.

கருத்து கூற மறுப்பு
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் தினகரனிடமிருந்து ஒரு வார்த்தையாவது பெற்று விட வேண்டும் என்று செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்தனர். அதற்கு தினகரன், வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறினார்.

டெல் யூ லேட்டர்
இந்த பதில் போதாது என்று நினைத்த செய்தியாளர்கள், தினகரனிடம் இரட்டை இலை லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள சுகேஷை தெரியுமா என்று நேரடியாக கேள்வி எழுப்பினர். இதற்கு ‘ஐ டெல் யூ லேட்டர்' என்று தினகரன் பதில் அளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications