For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்போர்ட்டில் எக்சிட் வழியாக நுழைய முயன்ற மத்திய அமைச்சர்: தடுத்து நிறுத்திய பெண் இன்ஸ்பெக்டர்

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: பாட்னா விமான நிலையத்தில் வெளியேறும் வழியாக உள்ளே நுழைய முயன்ற மத்திய அமைச்சர் ராம் க்ரிபால் யாதவை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு வந்த மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை வரவேற்க சக மத்திய அமைச்சரான ராம் க்ரிபால் யாதவ் இன்று விமான நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியாக உள்ளே நுழைய முயன்றார்.

'I Was Wrong,' Says Union Minister Who Tried to Break the Rules at Patna Airport

தவறான வழியில் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற யாதவை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தி சரியான வழியாக வருமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த இன்ஸ்பெக்டர் தனது உயர் அதிகாரிகளுடன் வாக்கி டாக்கி மூலம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தார். அதன் பிறகு யாதவை பார்த்து இந்த வழியாக நீங்கள் உள்ளே நுழைய முடியாது என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

இது குறித்து யாதவ் கூறுகையில்,

நான் தவறு செய்துவிட்டேன். நான் தவறான நுழைவாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றிருக்க முடியாது என்றார்.

English summary
A woman inspector stopped union minister Ram Kripal Yadav who tried to enter Patna airport via exit gate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X