இளங்கோவன், விஜயதாரணி புகார்களை வாபஸ் பெறச் சொல்லி "பைசல்" செய்த சோனியா!
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் - விஜயதாரணி மோதல் விவகாரத்தில் இரு தரப்பினரும் போலீசில் அளித்துள்ள புகார்களை திரும்ப பெற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். சோனியா உத்தரவால் புகார்களை திரும்ப பெற உள்ளதாக டெல்லியில் விஜயதாரணி கூறியுள்ளார். இதன்மூலம் கடந்த சில வாரங்களாக சத்திய மூர்த்தி பவனில் இருவருக்கும் இடையே நடைபெற்ற மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை குஷ்புவை, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வைத்தால், நிச்சயம் வெற்றி பெறுவார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய தகவல் தான், அந்த தொகுதி, எம்.எல்.ஏ.,வும், மகளிர் காங்கிரஸ் தலைவியுமான விஜயதாரணியின் கொந்தளிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான புகார்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு, சிதம்பரம் உட்பட அத்தனை கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று சோனியா, ராகுல் காந்தியிடம் நேரில் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் தங்கபாலுவுடன் வெளிப்படையாகவே இளங்கோவன் மோதினார். தங்கபாலுவின் சொத்து விவரங்கள் தொடர்பாக இளங்கோவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பின்னர் தமக்கு எதிரான வசந்தகுமார் வசம் இருந்த வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்தார் இளங்கோவன்.

விஜயதாரணி கடிதம்
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு கடந்த நவம்பர் மாதம் விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார். தரக்குறைவாக பேசிய இளங்கோவன் மீது பெண் கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயதாரணி ஆதரவாளரான சாந்தாஸ்ரீநி, காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

விஜயதாரணியின் பஞ்சாயத்து
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விஜயதாரணி தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோவன் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழும் இளங்கோவன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் விஜயதாரணி மீது சாதியை சொல்லி திட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மேலிடம் அதிர்ச்சி
சென்னையில் நடந்த இந்த சம்பவம் டெல்லி மேலிடத்தை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து மேலிட அழைப்பின் பேரின் இளங்கோவன், விஜயதாரணி இருவரும் கடந்த 1ம் தேதி டெல்லி சென்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் மற்றும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஷா ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.

ராகுல்காந்தி அதிருப்தி
இந்த சம்பவம் ராகுல் காந்தியை கோபம் அடைய செய்ததாக கூறப்பட்டது. உள்கட்சிக்குள் பேசி தீர்த்து இருக்க வேண்டிய விஷயம் தெருச்சண்டை போல் வெளியே வந்ததால் அதிருப்தி அடைந்தார். இதனை தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த போதும் வெளிப்படுத்தினார்.

ஆதரவாளர்கள் நீக்கம்
இதனிடையே மீனம் பாக்கம் விமான நிலையத்தில் ராகுல்காந்தியை வழியனுப்ப தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணிக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. அப்போது இளங்கோவன், விஜயதாரணி தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விஜயதாரணி ஆதரவாளர்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிகாரம் இல்லை
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்கும் அதி காரம் அவருக்கு இல்லை. மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக சாந்தாஸ்ரீநி தொடர்வார் என்று கூறிய விஜயதாரணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை சென்னை விமான நிலையத்திலும், சத்தியமூர்த்தி பவனிலும் தரக்குறைவாகப் பேசி தாக்க முற்பட்ட ஆலிஸ் மனோகரி, பூங்கொடி ஆகியோரை மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.

வாபஸ் பெற முடிவு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் - விஜயதாரணி மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரும் போலீசில் அளித்துள்ள புகார்களை திரும்ப பெற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். சோனியா உத்தரவால் புகார்களை திரும்ப பெற உள்ளதாக டெல்லியில் விஜயதாரணி கூறியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் சமாதானம்
கடந்த சில வாரங்களாக சத்திய மூர்த்தி பவனில் நடந்த கலாட்டாக்களும், சண்டைகளும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது விஜயதாரணி - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடையே நடைபெற்ற மோதல் முடிவுக்கு வந்துள்ளதால் சட்டசபை தேர்தலில் இருவரும் இணைந்து செயல்பாடுவார்களா? அல்லது சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தலைமைப்பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications