சரியாக பணியாற்றாத அமைச்சர்கள் குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை: கர்நாடக ஆளுநர் எச்சரிக்கை
பெங்களூர்: அமைச்சர்கள் சரியாக தங்களது பணிகளை மேற்கொள்ளாவிட்டால், அது குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புவேன் என கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் எச்சரித்துள்ளார்.
நேற்று பெங்களூர் கண்டீரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய விபத்து மேலாண்மை தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில ஆளுநர் பரத்வாஜ், விழா முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களாவது:-
கர்நாடக அமைச்சர்களின் செயல்பாடுகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எந்த மந்திரியின் செயல்பாட்டிலும் குறைபாடோ அல்லது பணியில் கவனக்குறைவாக இருப்பதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன்.
அரசியலமைப்பின் முக்கிய பிரதிநிதியான நான், மாநில அரசு மீது கவனம் செலுத்துவது அவசியம். அதுவே எனது கடமை. அந்த பணியை நான் செய்வேன். அமைச்சர்களின் செயல்பாட்டில் கவனிக்கத்தக்க விஷயங்கள் இருந்தால் அதுகுறித்து நான் நிச்சயமாக குடியரசுத்தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
எனது பதவி காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு நான் இதே பதவியில் நீடிப்பது குறித்து குடியரசுத்தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரை மாற்ற சிலர் முயற்சி செய்வதாக கூறுவதில் உண்மை எதுவும் இல்லை.
கர்நாடகத்தையும், பெங்களூர் நகரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். 1994-ம் ஆண்டு நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது, பெரும்பாலான கூட்டங்களை பெங்களூர் விதானசவுதாவில் நடத்தினேன். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மத்திய அமைச்சர்களை இங்கேயே அழைத்து கூட்டங்களில் பங்கேற்க செய்தேன். பெங்களூர் அழகான நகரம். சிறந்த சுற்றுலா தலம். எனக்கு பெங்களூரை விட்டு செல்ல மனம் இல்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங் என்னை சந்தித்து பேசியது குறித்து நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். நான் மத்தியபிரதேசத்தில் 25 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தேன். திக்விஜய் சிங் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்வது சாதாரணம். அவர் பெங்களூர் வந்தால் என்னை சந்திப்பார். இல்லாவிட்டால், நான் அவரை சந்திப்பேன். இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்க வேண்டாம்.
திக்விஜய் சிங்குடன் நான் அரசியல் குறித்து பேசியதாக கூறுவது பொய். அவரிடம் நான் எந்தவொரு அமைச்சர் குறித்தும் அதிருப்தி தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதுகுறித்து நான் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன்.
மாநிலத்தின் நிரந்தரமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. நகர பாதுகாப்பு படை மற்றும் போலீசாருக்கு வசதிகளை செய்து கொடுப்பதில் பாரபட்சம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்வார்.
காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். நான் காங்கிரஸ் உறுப்பினர் இல்லை. கட்சி நடவடிக்கை பொறுப்பு வகிக்கவில்லை. அரசின் செயல்பாடுகள் மட்டுமே எனது அதிகாரத்துக்கு உட்பட்டு வருகிறதே தவிர கட்சி பொறுப்பு இல்லை. கட்சி நடவடிக்கைகளை காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் கவனிக்கிறார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications