1000 கிலோ வெடி பொருட்கள்.. 4 இடங்கள்.. மொத்த முகாம்களும் காலி.. வெளுத்தெடுத்த இந்தியா
பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை தகர்த்து அழித்தது
Recommended Video

ஜம்மு: பாகிஸ்தான் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும், அட்டகாசம் செய்து வரும் தீவிரவாதிகளுக்கு முடிவு கட்ட இந்தியா பலத்துடன் களம் இறங்கியுள்ளது. இன்று நடந்த தாக்குதலில் 1000 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
அதை விட முக்கியமாக பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியான பாலகோட் என்ற பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மோடி அறிவிப்பு
புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார்.

அதிகாலை 3.30 மணி
எனவே தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை தர இந்தியா ஆயத்தமாகி வந்தது. அதன் அடிப்படையில் களம் இறங்கி விட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு இதற்கான நேரம் குறிக்கப்பட்டும்விட்டது.

சக்தி வாய்ந்த குண்டுகள்
இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா விமானப் படை தாக்குதலை அதிரடியாக நடத்தியது. ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த குண்டுகள்... இவைகளைதான் தீவிரவாத முகாம்கள் மீது வீசியெறிந்தது இந்தியா.

4 இடங்கள் குறி
இப்படி தாக்குதலை நடத்துவதற்காக 12 மிராஜ் ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 4 இடங்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன.

உயிர்சேதம்
இந்த அதிரடி குண்டு வீச்சில் சிக்கி அத்தனை தீவிரவாத முகாம்களும் முற்றிலும் தூள்தூளாக அழிந்து நாசமானது. பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு நெடுகிலும் உள்ள முகாம்களை தாக்கி தகர்த்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications