ஜெ.வின் வாரிசு என அம்ருதா நிரூபித்தால் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கட்டும்... சசிகலா புஷ்பா தடாலடி
ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என பெங்களூர் அம்ருத்தா நிரூபித்தால் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கட்டும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என பெங்களூர் அம்ருத்தா
விஞ்ஞான ரீதியில் நிரூபித்துவிட்டால் அவரை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அதிமுகவின் தலைமை பொறுப்பே ஏற்க வழிவிடுவேன் என்றும் சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதல் முதலாக குரல் கொடுத்தவர் சசிகலா புஷ்பா எம்.பி. தான். அடுத்தபடியாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்பதை எதிர்த்தவரும் அவர்தான்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவுக்கு போட்டியாக நிற்க கட்சி தலைமை அலுவலகத்துக்கு கணவரை அனுப்பி விண்ணப்பம் பெற்று வர சொன்னபோது சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலா புஷ்பாவின் கணவரை தாக்கினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது

தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தேன்
அதிமுகவின் எதிர்காலம் குறித்து சன் நியூஸ் சேனலில் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்றுநான்தான் முதலில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அதனடிப்படையில்தான் சசிகலா நடராஜன் அவர்களின் குடும்பம் வெளியே தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுச் செயலாளர் யார் என போட்டி
தேர்தல் கமிஷனில் என்னுடைய புகார் நிலுவையில் உள்ளது. இரட்டை இலைக்கு மட்டுமே இப்போது தீர்ப்பு வந்துள்ளது. பொதுச் செயலாளர் யார் என்ற போட்டி வரும் போது நிச்சயமாக நான் நிற்பேன். என் தலைமையில் அதிமுக தலைமையில் தனி அணி உருவாகி வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, நீட், ஓகி புயல் என பிரச்சினைகள் வந்தது. இதுபோல் பிரச்சினைகள் எழும்போது எனது தலைமையை நிரூபிப்பேன்.

தொண்டர்கள் என்னை ஏற்பர்
ஜெயலலிதாவே சசிகலா புஷ்பாவை அடுத்த தலைமை என்று கூறயிருந்த நிலையில் சசிகலா குடும்பத்தினரால்தான் இது கெட்டுவிட்டது என்ற உண்மையை புரிந்து கொள்ளும் தொண்டர்கள் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வர். சந்தர்ப்பம் வரும் போது ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொள்வர். எம்எல்ஏ சீட்டுக்கு ஒரு தொகுதியில் தகுதி வாய்ந்த நபரை விட்டுவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவருக்கு சீட் வாங்கிக் கொடுப்பதுதான் சசிகலா குடும்பத்தினரின் வேலை. இதற்கு ஆண்டவன் என் மூலமாக தீர்வு கொடுத்துள்ளார்.

கட்சி பொறுப்பை ஏற்கட்டும்
அம்ருத்தா நிச்சயமாகவே ஜெயலலிதாவின் வாரிசு என நிரூபித்துவிட்டால் நான் அவரை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். அதிமுகவை தலைமையேற்க விரும்பினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அவருக்கு பக்கபலமாக இருந்து வழிநடத்துவோம். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நிச்சயம் அரசுடமையாக்கப்பட வேண்டும். தேவைப்படும்போது ஸ்லீப்பர் செல்கள் என் பின்னால் போர் படை தளபதிகளாக வந்து நிற்பார்கள். அப்போது தமிழகத்தை வென்று காட்டுவோம் என்றார் அவர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications