பக்கா ஸ்கெட்ச்.. பாஜக ‘க்ளீன் ஸ்வீப்’ அடிச்சா அதற்கு காரணம் இந்த 3 மேட்டர்கள் தான்! பயங்கர பிளான்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச எக்சிட் போல் முடிவுகள், காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான இழுபறி நிலை ஏற்படும் என்கின்றன. சில கணிப்புகள், பாஜக க்ளீன் ஸ்வீப் அடிக்கும் என்கின்றன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதற்கு முக்கிய காரணமாக இந்த 3 விஷயங்கள் தான் இருக்கும் என ம.பி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 73.71 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

If BJP Sweeps Madhya Pradesh Election, It will largely be due to 3 factors

கணிப்புகள் சொல்லும் விஷயம்: இதற்கிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை முதல் வெளியாகின. முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகளில், 4 கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவும், 3 கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாகவும், 4 கருத்துக்கணிப்புகள் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் எனவும் கணித்துள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட துல்லியமாக கணித்திருந்த சி-வோட்டர், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கணித்துள்ளது.

எனினும், பாஜகவினர், மத்திய பிரதேசத்தில் தங்களுக்கு ஆதரவான கருத்துக்கணிப்புகளைச் சுட்டிக்காட்டி க்ளீன் ஸ்வீப் என்று கூறி வருகின்றனர். பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். ம.பி ரிசல்ட்டில் க்ளீன் ஸ்வீப் உண்மையில் நடந்து, மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் அதற்கு 3 விஷயங்கள் தான் முக்கியமான காரணங்களாக இருக்கும் என ம.பி ஊடகங்கள் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.

முதல் காரணம்: லட்லி பெஹேனா யோஜனா திட்டம். அதாவது, தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தின் 1.3 கோடி பெண்களுக்கு ரொக்கப் பணமளிக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்டில் ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும், சுமார் 30 லட்சம் இளநிலைப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், துணை சர்பஞ்ச், பஞ்சாயத்து தலைவர் போன்ற தலைவர்களின் கவுரவ ஊதியத்தை மும்மடங்கு உயர்த்துவதாகவும் உறுதியளித்தார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

மேலும், மாணவர்களுக்கு 135 கோடி ரூபாய் செலவில் இ-ஸ்கூட்டர்கள், 78,000 மாணவர்களுக்கு 196 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினிகள் வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார் சிவராஜ் சிங். இந்த திட்டங்கள், ம.பி மக்களிடையே பெரிய அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில், இது இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவது காரணம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி 15 பேரணிகளில் பங்கேற்று உரையாற்றினார். கூடுதலாக, பந்தேல்கண்டில் வெவ்வேறு நாட்களில், ம.பி முதல்வர் சவுஹானுடன் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி ஆகியோர் பங்கேற்று கூட்டங்களில் பேசினர். பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக குவிந்து ம.பியில் ஆற்றிய பிரச்சாரம், பாஜகவுக்கு பலன் தரக்கூடும்.

மூன்றாவது காரணம்: கடைசி கட்டத்தில், இந்து கோவில்களுக்கு தாராள நிதி அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சல்கான்பூரில் உள்ள தேவிலோக், ஓர்ச்சாவில் உள்ள ராம்லோக், சித்ரகூட்டில் திவ்ய வனவாசி லோக் ஆகிய நான்கு கோயில்களை விரிவுபடுத்த ம.பி மாநில பாஜக அரசு ரூ.358 கோடி ஒதுக்கியது. சாகரில் உள்ள ரவிதாஸ் கோவில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியால் பூமிபூஜை செய்யப்பட்டது, இது 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

14 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த்வாராவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தால் கட்டப்பட்ட 101 அடி உயர அனுமன் சிலைக்கு போட்டியாக, பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஆகஸ்ட் மாதம் சிந்த்வாராவில் உள்ள பழைய அனுமன் கோயிலை ரூ.350 கோடியில் புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதுவும், ம.பியில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பாஜக நோக்கி திருப்பக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+