மோடி இதை மட்டும் அறிவித்துவிட்டால்..லோக்சபா தேர்தலிலேயே நாங்க போட்டியிடலை.. மமதா கட்சி அதிரடி சவால்!
கொல்கத்தா: ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுவிட்டால் லோக்சபா தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகிவிடும் என அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதிய உயர்வை அறிவித்தது. இதன்படி இனி 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ319 ஆக கிடைக்கும் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
இதனடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மத்திய பாஜக அரசுக்கு அதிரடியாக சவால் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்காக 2021 முதல் நிதி உதவி வழங்குகிறோம். இதனையே பாஜக பல மாநிலங்களில் பின்பற்றி வருகிறது.

மேற்கு வங்க மாநில அரசின் நிதிநிலை அறிக்கையிலும் கூட பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கான நிதி உதவி ரூ500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கான நிதி ரூ1,000-ல் இருந்து ரு1,200 ஆக உயர்த்தி உள்ளோம்.
தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு திராணி இருந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர், இனி ஏழைகளுக்கு இலவசம் என அரசாணை வெளியிடட்டும். அப்படி ஒரு அரசாணையை மட்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டால், லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் நாங்கள் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் வாபஸ் பெற்றுவிடுகிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். ஆனால் பிரதமர் மோடியோ வங்கி கணக்குகளில் ரூ15 லட்சம் போடுவோம் என்றார். நிறைவேற்றினாரா? இல்லையே? இவ்வாறு அபிஷேக் பானர்ஜி கூறினார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications