For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெ. வராவிட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: சு. சாமி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி பதவியேற்பு விழா அழைப்பை ஜெயலலிதா ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரணியன் சாமி தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

If Jaya doesn't accept Namo swearing- in invitation implement president's rule in TN: Says Swamy

இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I am in favor of President's Rule for four months followed by elections to Assembly if JJ govt doesn't accept Namo swearing- in invitation</p>— Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/statuses/469281492154077184">May 22, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader Subramanian Swamy tweeted that, 'I am in favor of President's Rule for four months followed by elections to Assembly if JJ govt doesn't accept Namo swearing- in invitation'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X